அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்ற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறுகிறது. எவ்வாறாயினும், அது தற்போது பள்ளத்தின் விளிம்பிற்குள் முடிவடைந்துள்ளது, எனவே உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு கூறுகிறது.
அதே நேரத்தில், இந்த எரிமலை வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், எரிமலைக்குழம்பு ஓட்டம் விரைவில் மாறக்கூடும் என்றும் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது. எரிமலைக்குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கினால், தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேறத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 1843ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா எரிமலை, கடைசியாக 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
World’s largest volcano erupts in America after 38 years – alert for 2 lakh people !!
Mauna Loa is a volcano on the island of Hawaii in the Pacific Ocean in the western part of the United States. It is the largest volcano in the world.
After almost 40 years now, this volcano has erupted. According to reports, the volcanic eruption began on Sunday night following large-scale earthquakes.
Following a volcanic eruption, fiery lava flows out of the volcano. However, it has now ended up within the rim of the crater, so there is no immediate threat, according to the US Geological Survey.
At the same time, the observatory has warned that the eruption will be very powerful and the flow of lava may change soon. About 2 lakh people living on the island have been advised to be prepared to evacuate if the lava starts moving towards residential areas.
Mauna Loa volcano erupted 33 times between 1843 and now, and the last eruption was in 1984.
Leave a Reply