Which runs in Tamil Nadu during the curfew? Which ones do not work?

As the corona infection is on the rise in Tamil Nadu, various restrictions have been imposed on the night curfew from today and the full curfew on Sunday.

Permissible in curfew restrictions

  • Public and private bus services are permitted within the state.
  • Permission is granted for milk distribution, daily newspaper distribution, hospitals, medical laboratories, pharmacies, ambulance and ambulance services.
  • ATMs are allowed to operate and trucks and fuel vehicles are allowed to operate at night.
  • Petrol and diesel stocks can operate 24 hours a day.
  • Manufacturing factories, information technology service companies are allowed to operate. IT company employees are advised to work from home.
  • Only 50% of customers are allowed in restaurants, hotels, apartments, hostels, lodges.
  • Only 100 people can attend wedding and wedding related events.
  • No more than 50 people can participate in death-related events.
  • Clothing stores can run up to 50% of customers in jewelry stores, and gymnasiums in clubs can run up to 50% of customers in restaurants.
  • Can work with up to 50% of customers in gyms and yoga studios, and up to 50% of customers in theaters.
  • Matches are allowed to be held in open-air playgrounds with proper etiquette.
  • 50% of spectators can participate in indoor stadiums, seminars, music and drama events.
  • Beauty salons and salons can operate up to 50% of customers.

The full freeze will be implemented on January 9 and will allow for essential functions such as,

  • Medicine, Milk distribution, ATMs, freight transport, petrol and diesel stocks. Traffic and metro trains were not allowed on the day.
  • Restaurants are only allowed for parcel services from 7am to 10pm. Food delivery service companies are also allowed to operate during this time.
  • The government has said that 10th, 11th and 12th classes can be run in Tamil Nadu. Only 50% of customers are allowed in public places.

From today, to control the spread of corona,

  • Kindergartens, kindergartens, nursery schools are not allowed.
  • Direct classes from 1st to 9th are prohibited. Direct classes will be held for students in grades 10,11,12 who are eligible to be vaccinated against corona.
  • Students studying in all colleges and vocational training institutes except Government Private Medical and Allied Medical Colleges are given leave till January 20 for writing the examination. Training centers are banned from operating.
  • Item displays, book fairs are currently postponed.
  • Public buses allow only 50% of passengers to sit in seats on suburban trains
  • Provided. Only 50% of passengers on metro trains are allowed to travel by seat.
  • Pongal and art festivals run by the state private sector are postponed.
  • Amusement parks are prohibited from operating.
  • Only walking on the beach is allowed.
  • All places of worship are not open to the public on Fridays, Saturdays and Sundays.
  • The current ban on community, cultural and political gatherings will continue.
  • Steps will be taken to hold fish and vegetable markets at more than one place to avoid crowds at fish and vegetable markets.
  • Buses plying from integrated bus stations are advised to take appropriate action to run at different locations.
  • Employees working in shops, businesses, private and theaters should be vaccinated in 2 installments.
  • Government Local Government Employees should submit the proof of vaccination to the concerned office by the 9th.
  • Workers in factories during the curfew are required to have an identity card and a certificate of vaccination during night shifts.

தமிழ்

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எவை இயங்கும்? எவை இயங்காது?

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு குறித்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அனுமதிக்கப்படுபவை 

  • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆன்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 
  • எடிஎம் மையங்கள் செயல்படவும், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவிலும் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 
  • பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணிநேரமும் செயல்படலாம்.
  • உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகின்றன.
  • உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்கள் ஆகியவற்றில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. 
  • திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம். 
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்.
  • துணி கடைகள், நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடனும், கிளப்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்களில் 50 % வாடிக்கையாளர்களுடனும் இயங்கலாம்.
  • உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி கூடங்களில் 50% வாடிக்கையாளர்களுடனும், திரையரங்குகளில் 50% வாடிக்கையாளர்களுடனும் செயல்படலாம்.
  • திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் முறையான வழிபாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • உள் விளையாட்டு அரங்கங்கள், கருத்தரங்கம், இசை, நாடகம் நிகழ்ச்சிகளில் 50 % பார்வையாளர்கள் பங்கேற்கலாம்.
  • அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.  

முழு முடக்கம் அமல்படுத்தப்படும் ஜனவரி 9ஆம் தேதி,

  • மருத்துவம், பால் விநியோகம், எடிஎம், சரக்கு வாகன போக்குவரத்து, பெட்ரோல், டீசல் பங்குகள் போன்ற அத்தியாச பணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. 
  • அன்றைய தினம் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி இல்லை.
  • உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிப்படுகிறது. உணவு விநியோக சேவை நிறுவனங்களுக்கும் இந்த நேரத்தில் இயங்க அனுமதிப்படுகிறது. 
  • தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12 வகுப்புகள் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் 50% வடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல், 

  • மழலையர் காப்பகங்கள், மழலையர் விளையாட்டுப்பள்ளிகள், நர்சரி பள்ளிகள் அனுமதி இல்லை.
  • 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏதுவாக 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
  • அரசு தனியார் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர  மற்ற அனைத்து கல்லுரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது. பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.
  • பொருள் காட்சிகள் , புத்தக கண்காட்சிகள் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. 
  • பொது பேருந்துகள், புறநகர் ரயில்களில் உள்ள இருக்கையில் 50% பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி
  • வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களிலும் 50% பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
  • அரசு தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலைவிழாக்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. 
  • பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காகள் செயல்பட தடைவிதிகப்படுகிறது.
  • கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வழிபாட்டு தளங்களும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மக்களுக்கு அனுமதி இல்லை.
  • சமுதாய, கலாச்சார , அரசியல் கூட்டங்களுக்கு தற்போது உள்ள தடை தொடரும். 
  • மீன், காய்கறி சந்தைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த மீன், காய்கறி சந்தைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 
  • ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பேருந்துகளை வெவ்வேறு இடங்களில் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார், திரையரங்குகளில் பணியாற்றும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும். 
  • அரசு உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திய சான்றை வரும் 9-ம் தேதிக்குள் தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். 
  • ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், இரவு பணிக்கு செல்வோர் அடையாள அட்டை, தடுப்பூசி செலுத்தி கொண்டதற்க்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என வலிவுறுத்தப்பட்டுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.