இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்

இந்திய ஜனநாயகத்தில் முதன்முதலாக 1975  ஜூன்  25 முதல் 1977 மார்ச் 21 வரை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது  21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது வால், அப்போதைய இந்திய நெருக்கடி நிலையானது பிரதமர்  இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. அப்போது முடிவடைந்த பாகிஸ்தான் போர் மற்றும் எண்ணெய் நெருக்கடி போன்றவற்றால் தேசம் பொருளாதார  சிக்கலில் உள்ளது இதனால் அரசு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஜனநாயகம் சீர்குலையும் எனவும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குடியரசு தலைவரை அவசரகால நிலையை பிரகடனப்படுத்த ஆலோசனை கூறினார்.

ஆறு மாதங்கள் என கூறி ஆரம்பித்த நெருக்கடி நிலை 1977 மார்ச் வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயலாட்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களை பெற்றார். குடியுரிமைகள் முடக்கி எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார். வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகள் போன்றவைகள் அதிகமாகின இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடி உருவாகியது. பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜீவித்ராம் கிருபாளினி, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, பல பொதுவுடமைவாதிகள், பொதுவுடமைக் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவசர காலங்களில் அரசின் மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றசாட்டுகள் :

* குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மக்கள் காவலர்களால் கைது செய்யப்பட்டது.

* கைதிகள் மற்றும் அரசியல் கைதிகள். சித்திரவதை செய்யப்பட்டது.

* தனியார் ஊடக நிறுவனங்களின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்புகளை அரசு பிரசாரம் செய்ய பயன்படுத்திக் கொண்டது.

* கட்டாய கருத்தடை.

* பெரிய அளவிலான சட்டவிரோத செயல்கள் அரங்கேற்றியது.

* நாட்டின் அனைத்து பத்திரிகைகளும்,செய்தி ஊடகங்களும்  மத்திய அரசுக்கு எதிரான செய்திகள்  நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது 

* மத்திய அரசை ஆதரித்து அரசின் செலவில் விளம்பரமும் பிரச்சாரமும் மேற்கொண்டது.

நெருக்கடி நிலை அதிகாரப்பூர்வமாக மார்ச் 23, 1977 அன்று முடிவுற்றது.  நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு நடந்த தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியுற்றது. இந்திரா காந்தி போன்ற முக்கிய நபர்கள் தோல்வியுற்றனர், மேலும் இந்தியாவில் முதன்முறையாக காங்கிரஸ் இல்லாத ஆட்சி நடைபெற்றது.

The Dark Ages of Indian Democracy

The first state of emergency was declared in Indian democracy from June 25, 1975 to March 21, 1977, for a period of 21 months by the President of the Republic of India, Bakrudeen Ali Ahmadwal. The then Prime Minister Indira Gandhi advised the President to declare a state of emergency, saying that the country was in financial trouble due to the Pakistan war and the oil crisis that had ended, and that democracy would be disrupted if civil servants were involved in the struggle.

The crisis, which began as a six-month period, lasted until March 1977. During this period the parliamentary elections and the activities of the state governments were postponed. By enacting Article 352 of the Constitution of India, Indira Gandhi gained additional privileges for herself. He suppressed citizenship and suppressed the opposition. Strikes, riots, insurgencies and protests escalated, creating a severe economic crisis for the state. Several prominent political leaders Jayaprakash Narayan, Raj Narayan, Morarji Desai, Charan Singh, Jeevitram Kirupalini, Atal Bihari Vajpayee, Lal Krishna Advani, several Commonwealth and Commonwealth Party leaders were arrested and imprisoned.

Various allegations leveled against the state during emergencies:

* People were arrested by the police without informing the families.

* Prisoners and political prisoners. The torture was done.

* Utilizing the national television networks of private media outlets to propagate the government.

* Mandatory contraception.

* Large-scale illegal activities staged.

* All newspapers and media outlets in the country removed and published anti-federal news

* Advertising and campaigning at the expense of the state in support of the central government.

The state of emergency officially ended on March 23, 1977. The Indian Congress lost most of the seats in the elections held after the end of the crisis. Prominent figures like Indira Gandhi failed, and for the first time in India a non-Congress rule took place.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.