உக்ரைன் போர் 100வது நாளை எட்டியது: உலக உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் 100வது நாள் தாக்குதல் இந்தப் போருக்கு மத்தியில், உணவுப் பாதுகாப்பு நெருக்கடி மோசமடைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள், பெரும்பாலும் கோதுமை, சோளம் மற்றும் அரிசி ஆகியவை தினசரி உணவாக எடுத்து கொள்கின்றனர். உலக மக்கள் தொகையில் இந்த மூன்று உணவு பொருட்களை 40 % மக்கள் உணவாக உட்கொள்கின்றனர். 

அமெரிக்க விவசாயத் துறையின் மதிப்பீட்டின்படி, கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு நான்கு மில்லியன் டன்கள், அதாவது 0.51 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்காச்சோள உற்பத்தியும் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அரிசி உற்பத்தி 515 மில்லியன் டன்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள உணவு உற்பத்தியில் சரிவு என்பது குறைவாகவே இருக்கும். எனினும், உக்ரைன்-ரஷ்யா போரினால் உணவு ஏற்றுமதி தடைபட்டுள்ள நிலையில், உணவு உற்பத்தியில் மந்தநிலை ஏற்பட்டாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பயன்படுத்தப்படும் முக்கியமான இரண்டு உணவுப் பொருட்களான சோளம் மற்றும் கோதுமையின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக உக்ரைன் மற்றும் ரஷியா உள்ளது. 

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமையை நம்பி 25 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களின் மொத்த கோதுமை தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இறக்குமதி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 15 நாடுகள் தங்கள் கோதுமை தேவையில் 50 சதவீதத்திற்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதை நம்பியுள்ளன.

தற்போதைய சூழலில், இந்த நாடுகளில் பெரும்பாலானவை மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போன்ற மேலும் பல உணவு ஏற்றுமதி நாடுகள் உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

Ukraine war reaches 100th day: World fears could lead to global food crisis!

Russia’s 100th day of invasion of Ukraine In the midst of this war, the food security crisis has worsened.

People all over the world, mostly wheat, corn and rice are taken as daily food. About 40% of the world’s population consumes these three foods.

Wheat production is projected to fall by four million tonnes, or 0.51 percent, this year, according to the U.S. Department of Agriculture. Similarly, maize production is expected to decline somewhat.

However, rice production is expected to touch 515 million tonnes. The decline in food production mentioned above will be minimal. However, with food exports hampered by the Ukraine-Russia war, there have been warnings that a slowdown in food production could have a greater impact.

Ukraine and Russia are the two major exporters of corn and wheat, two of the world’s most widely used foodstuffs.

There are 25 African countries relying on wheat imported from both Ukraine and Russia. It is estimated that these countries import more than one-third of their total wheat demand. Similarly, 15 countries depend on imports of 50 percent of their wheat demand from Ukraine and Russia.

In the current context, most of these countries are forced to look for alternatives. Many other food exporting countries, such as Ukraine and Russia, have imposed restrictions on food trade.

Leave a Reply

Your email address will not be published.