தமிழகம்

Thunder Village: BJP , VCK fighting hand in hand to reclaim the mountain

Share

Thandarai panchayat is located in Thirukalukundram under Thiruporur union in Chengalpattu district. Over the past six years, 44 acres of land has been set aside on behalf of SIDCO to set up an industrial park in this area with its natural environment.

For this, the lands were renamed from the Revenue Department to SIDCO. However, work on the industrial estate continued to be sluggish. In the meantime, work has been underway for the past few weeks to repair potholes in the land allotted to SIDCO. For this, they have taken soil from the pasture outlying land in the area adjacent to the forest.

The people of the area protested. Thus the earthworks were stopped. In this case, the soil leveling work was carried out again on the 3rd with the Bokline machine. On hearing this, more than 250 people gathered under the leadership of Jayalakshmi Ariyawansa of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

There they engaged in a siege struggle condemning the measuring of the soil. BJP volunteers from the area also joined the protest with their party flags. Scenes of VCK and BJP flags flying at the same time went viral on social media. Following this, peace talks were held under the chairmanship of Tashildar Rajan.

Following this, the Thunderbolt Panchayat passed a resolution calling for the cancellation of CIDCO land surveying in the hill country. The resolution said, “Government Outlying Land Field No: 182/2, 183 / A, 183B / 2, 183B / 4 in Thunder Panchayat under Thiruporur Panchayat Union. Have created an environment that is vulnerable to sheep, cows, peacocks and deer in the panchayat areas. In addition, groundwater, power poles, roads, and landslides are possible. Therefore, the JCP machine for grazing sheep and cows, the livelihood of the public, should be abolished immediately.

We did not prevent CIDCO from setting up the industrial park. For this they are digging the soil in the mountain in the name of filling the abyss. Thus, with the permission given by the Collector to measure the soil, it can be given in the hilly area. However, up to 300 lorries were dumped from the hill in violation of the rule. That is why we passed the resolution in the Panchayat, says Thandarai Panchayat President Jayalakshmi. They are destroying forests, mountains and minerals with the permission given by the district administration to SIDCO.

In this connection, those in the district administration held peace talks. Following this, the lorries were removed and they said, “We will not take any more soil.” “Since this is a state-owned place, look at the RDO,” the collector said. We have petitioned him too. “

How did the BJP participate in the struggle waged by the VCK?

We all live in the same town. There are a lot of Vannis and Dalits here. If there are 560 Vanni votes here then 500 votes fell to us. Embracing them too doesn’t cause any problems.

Next, we offered the post of vice-president to the BJP as we had too many ward members. We took part on both sides in the struggle to reclaim Thunder Mountain. They said they were able to save the mountain because everyone fought in unity.

Did the CIDCO management take the soil in violation of the permit?

Chengalpattu Revenue Commissioner (RDO) Shakita Parveen said, “We have received a petition regarding the matter going on there.” I have asked the waiter to investigate this. There does not seem to be a possibility of taking soil there without permission. “

தமிழ் 

தண்டரை கிராமம்: மலையை மீட்பதற்கு கரம் கோர்த்துப் போராடும் பாமக, விசிக

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்கழுகுன்றத்தில் தண்டரை ஊராட்சி உள்ளது . இயற்கையான சூழல் கொண்ட இந்தப் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ நிறுவனத்தின் சார்பில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 44 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வருவாய்த் துறையிடத்திலிருந்து சிட்கோ நிறுவனத்துக்கு நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. ஆனாலும், தொழிற்பேட்டைக்கான பணிகள் மிகவும் மந்த நிலையிலேயே நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சிட்கோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள பள்ளமான பகுதிகளை சீர்செய்யும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் இருந்து மண்ணை எடுத்துள்ளனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மண் அள்ளும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 3ம் தேதி மீண்டும் பொக்லைன் இயந்திரத்துடன் மண் அள்ளும் பணிகள் நடைபெற்றன. இதனையறிந்து தண்டரை ஊராட்சி மன்றத் தலைவியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜெயலட்சுமி அறிவழகன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர் .

அங்கு மண் அள்ளுவதை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடியுடன்  கலந்து  கொண்டனர். ஒரே நேரத்தில் வி.சி.க, பா.ம.க கொடிகள் பறந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது . இதையடுத்து, தாசில்தார் ராஜன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

இதனை அடுத்து மலைப் பகுதியில் சிட்கோ நிறுவனம் மண் அள்ளுவதை ரத்து செய்யுமாறு தண்டரை ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தில், ” திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நில புல எண்: 182/2, 183/ஏ, 183 பி/2, 183 பி/4 இந்த இடங்களில் உள்ள மலைப் பகுதியை சிட்கோ நிறுவனமானது, மலை, மரம், செடி, கொடிகள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுத்து வருகின்றனர். இதனால் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஆடு, மாடுகள், மயில், மான்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியது . மேலும், நிலத்தடி நீர், மின் கம்பங்கள், சாலைகள், மண் சரிவுகள் ஏற்படக் கூடிய சூழல் உருவானது . எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண் அள்ளுவதை உடனே ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சிட்கோ நிறுவனம் தொழிற்பேட்டை அமைப்பதை நாங்கள் தடுக்கவில்லை. இதற்காக பள்ளத்தை நிரப்புகிறோம் என்ற பெயரில் மலையில் உள்ள மண்ணைத் தோண்டி வருகின்றனர். இவ்வாறு மண் அள்ளுவதற்கு கலெக்டர் கொடுத்த அனுமதியில், மண் மேடான பகுதியில் அள்ளிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. ஆனால், விதியை  மீறி மலையில் இருந்து 300 லாரிகள் வரையில் மண்ணை அள்ளி விட்டனர். இதனால் தான் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம் என்கிறார் தண்டரை ஊராட்சி மன்றத் தலைவி ஜெயலட்சுமி. சிட்கோ நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை வைத்துக் கொண்டு காட்டையும், மலையையும்,  கனிமவளத்தையும் அழித்து கொண்டு வருகின்றன. 

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, அங்கிருந்த லாரிகளை அப்புறப்படுத்திவிட்டு, `இனி மண் எடுக்க மாட்டோம்’ எனக் கூறினர்.  இது அரசுக்குச் சொந்தமான இடம் என்பதால், `ஆர்.டி.ஓவை பாருங்கள்’ எனக் கலெக்டர் கூறினார். அவரிடமும் மனு அளித்துள்ளோம்” என்றனர்.

வி.சி.க நடத்திய போராட்டத்தில் பா.ம.க பங்கேற்றது எப்படி?  

நாங்கள் அனைவரும் ஒரே ஊரில் தான் வசிக்கிறோம். இங்கு வன்னியர்களும், தலித் மக்களும் அதிகம் உள்ளன. இங்கு 560 வன்னியர் வாக்குகள் உள்ளது என்றால் அதில் 500 வாக்குகள் எங்களுக்கு விழுந்தன. அவர்களையும் அரவணைத்துச் செல்வதால் எந்தப் பிரச்னையும் வருவதில்லை. அடுத்ததாக, எங்களிடம் அதிகப்படியான வார்டு உறுப்பினர்கள் இருந்ததால் பா.ம.கவுக்குத் துணைத் தலைவர் பதவியை வழங்கினோம். தண்டரை மலையை மீட்கும் போராட்டத்தில் இரு தரப்பிலும் பங்கேற்றோம். அனைவரும் ஒற்றுமையாக போராடியதால் மலையைக் காப்பாற்ற முடிந்தது என்றனர்.

அனுமதியை மீறி சிட்கோ நிர்வாகம் மண் எடுத்ததா?

செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) ஷாகிதா பர்வீன்  கூறுகையில், “அங்கு நடக்கும் விவகாரம் தொடர்பாக எங்களுக்கு மனு வந்துள்ளது”. இது தொடர்பாக தாசில்தாரிடம் ஆய்வு நடத்துமாறு கூறியுள்ளேன். அங்கு அனுமதியின்றி மண் எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பது போலத் தெரியவில்லை” என்கிறார்.

Thanglish

Thandarai kiramam: Malaiyai  meetpathargu karam korthu poradum BJP , VCK

Chengalpattu mavattam, Thiruporur ontriyathukutpatta Thirukalukundram thandarai uratchi ullathu. Iyargaiyana suzhal konda intha pakuthiyil kadantha aaru aandugaluku munbu sitco niruvanathin sarbil thozhil pettai amaipathargaga 44 ekkar nilam othukapattulathu.

Ithargaga varuvay thuraiyidathilirunthu sitco niruvanathuku nilangal peyar matram seyyapattana. Aanalum, thozhirpettaigana panigal migavum mantha nilaiyileye nadanthu vanthathu. Innilaiyil, kadantha sila varangalaga sitcovuku othukapatta nilathil ulla pallamana pakuthigalai serseyyum panigal nadanthu vanthana. Ithargaga vanapakuthiyai ottiya pakuthiyil ulla meykal purampokku nilathil irunthu mannai eduthullanar.

Itharku apakuthi makkal ethirpu therivithanar. Ithanal man allum panigal niruthi vaikapattana. Innilaiyil, kadantha 3m thethi meendum poklain iyanthirathudan man allum panigal nadapetrana. Ithanaiyarinthu thandarai ooratchi mandra thalaiviyum, viduthalai siruthaigal katchiyai serntha Jayalakshmi Arivazhagan thalaimaiyil 250kum merpatta makkal kuvinthanar.

Anku man alluvathai kandithu mutrugai poratathil idupattanar. Intha poratathil apakuthiyai serntha BJP thondargalum thangal katchi kodiyudan kalanthu kondanar. Ore nerathil VCK, BJP kodigal parantha katchigal, samuga valaithalathil vairalaga varaviyathu. Ithaiyaduthu, tahsildar rajan thalaimaiyil amathi pechuvarthai nadanthathu.

Ithanai aduthu malai pakuthiyil sitco niruvanam man alluvathai rathu seyumaru thandarai uratchi manram theermanam niraivetriyathu. Antha theermanathil, ” thiruporur uratchi onriyathukutpatta thandarai uratchiyil arasu purampoku nila pula en : 182/2, 183 / A, 183B / 2, 183B / 4 intha idangalil ulla malai pakuthitai sitco niruvanamanathu, malai, maram, sedi, kodigal aakiyavatrai JCP iyanthiram moolam eduthu varukinranar, Ithanal uratchi pakuthigalil ulla aadu, madugal, mayil, mangaluku pathupu erpadum suzhal uruvakiyathu. Melum, nilathadi neer, min kambangal, salaigal, man sarivugal erpadu kudiya suzhal uruvanathu. Enave, pothumakkalin vazhvatharamana aadu, madugalai meypatharkum JCP iyanthiram moolam man alluvathai udane rathu seyya vendum’ ena kuripitullanar.

Sitco niruvanam thozhirpettai amaipathai nangal thadugavillai. Ithargaga pallathai nirapukirom entra peyaril malaiyil ulla mannai thondi varukinranar. Ivvaru man alluvatharku collector kodutha anumathiyil, man medana pakuthil alli kollalam ena kuriyullathu. Aanal, vithiyai meeri malaiyil irunthu 300 larry varaiyil mannai alli vittanar. Ithanal than uratchi  mandrathil theermanam niraivetrinom enkirar thandarai uratchi mandra thalaivi jeyalashmi. Sitco niruvanathuku mavatta nirvagam kodutha anumathiyai vaithu kondu kattaiyaiyum, malaiyaiyaum, kanimavalathaiyum azhithu kondu varukinrana.

Ithu thodarpaga, mavatta nirvagathil ullavargal amaithi pechuvarthai nadathiyathu. Ithaiyaduthu, ankirunthu larryai appurapaduthivittu, “Ini man eduka mattom” ena kudinar. Ithu arasuku sonthamana idam envathal “,” RTO vai paarungal ” ena collector kurinar. Avaridamum manu alithullom enranar.

VCK nadathiya poratathil BJP pankerathu eppadi?

Nangal anaivarum ore uril than vasikirom. Inku vanniyarkalum, thalith makkalum athigam ullana. Inku 560 vanniyar vakkugal ullathu endral athil 500 vakkugal engalukku vizhunthana. Avargalaiyum aravanaithu selvathal entha pirachanaiyum varuvathillai. Aduthathaga, engalidam athigapadiyana vardu urupinargal irunthathal BJPku thunai thalaivar pathaviyai vazhankinom Thandarai malaiyai meetkum poratathil iru tharapilum pankerom. Anaivarum orumaiyaga poradiyathal malaiyai kappatra mudinthathu enranar.

Anumathiyai meeri sitco niruvanam man eduthathaa?

Chengalpattu varuvai potatchiyar(RTO) shakitha parveen kurugaiyil, ” Anku nadakum vivagaram thodarpaga engaluku manu vanthullathu”, Ithu thodarpaga thasiltharidam aayvu nadathumaru kuriyullen. Anku anumathiyindri man edupathrku vayppu irupathu pola theriyavillai” enkirar.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago