The world’s largest plant has been found under the sea in Shark Bay, located in Western Australia. Researchers at the University of Blinders in South Australia and the University of Western Australia have discovered this rare plant.
When trying to find the diversity of the sea plains in Shark Bay using genetic tools, 180 km. The researchers said they were surprised to find the plant so widespread. They estimate that the seaweed is 4,500 years old.
Martin Fried, an ecologist at the University of Flinders and co-author of the study, said: “This single plant may actually be sterile. It has no pollination. However, how it survives and grows for so long is really a mystery.”
ஆஸ்திரேலிய கடலில் உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிப்பு !!
மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த அரிய தாவரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மரபணுக் கருவிகளைப் பயன்படுத்தி ஷார்க் விரிகுடாவில் உள்ள கடல் சமவெளிகளின் பன்முகத்தன்மையைக் கண்டறிய முயன்றபோது, 180 கி.மீ. பரவலாக காணப்படும் இந்த தாவரத்தை கண்டு ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கடற்புல் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் மதிப்பிட்டு கூறியுள்ளனர்.
பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான மார்ட்டின் ஃப்ரீட் கூறுகையில், “இந்த ஒற்றைத் தாவரம் உண்மையில் மலட்டுத்தன்மையுடையதாக இருக்கலாம். இதில் மகரந்தச் சேர்க்கை இல்லை. இருப்பினும், அது எப்படி இவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது மற்றும் வளர்கிறது என்பது உண்மையில் ஒரு மர்மம்” என்றார்.
Leave a Reply