The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2 general examination starting today.

Due to the spread of corona, for the last 2 years, the school students have not been able to conduct the final examination of the year in full. Thus the pass was declared on the basis of monthly examination, quarterly examination, and half-yearly examination marks.

All students from 1st to 9th grade were declared to pass. Due to the unavailability of live classes in schools, lessons are conducted through “online” classes.

Start live classes

In this context, direct classes were gradually introduced in schools from October last year. First the SSLC. And for Plus-2 classes, followed by students in grades 6 through Plus-1.

After the corona infection came under control, kindergarten classes were started from 1st to 5th class and thereafter. Due to the late start of classes for the 2021-2022 academic year, the curriculum has been reduced so that students can face the exam.

General election arrangements

Classes were held on Saturdays without holidays, as school workdays were short. Although the quarterly and half-yearly examinations were not conducted, the monthly examinations were conducted and the marks were recorded and the conversion examination was completed.

Currently, the school education department is determined to hold a compulsory general examination this year for SSLC, Plus-1, and Plus-2 students, despite the declining corona spread. He is making arrangements for that.

The Plus-2 exam starts today

Tasks including setting up of examination centers and air force were carried out by the Primary Education Officers district wise. In this case, the Plus-2 exam is scheduled to start today (Thursday) and run until the 28th.

Similarly, the SSLC examination will be held from tomorrow (6th) to the 30th. The Plus-1 exam is scheduled to start on the 10th and end on the 31st. The Plus-2 general examination is to be held in 3,119 centers across Tamil Nadu. 8 lakh 37 thousand 317 people are writing this exam. This includes 3 lakh 98 thousand 321 students and 4 lakh 38 thousand 996 students.

SSLC – Plus-1 selection

The SSLC general examination is held at a total of 3,936 centers. 9 lakh 55 thousand 474 people are writing this exam. This includes 4 lakh 86 thousand 887 students and 4 lakh 68 thousand 587 students.

Similarly, the Plus-1 general examination is being held at 3,119 centers. 8 lakh 83 thousand 884 people are writing this exam. This includes 4 lakh 33 thousand 684 students and 4 lakh 50 thousand 198 students.

1,000 Flying Forces Organization

A total of 26 lakh 76 thousand 675 candidates are scheduled to appear for the SSLC, Plus-1, and Plus-2 general examinations. This includes 3 students of the third gender. 1,000 flying squads have been set up to prevent students from sipping coffee.

Also, generators are fitted at the selection centers to prevent power outages. It is forbidden to carry a cell phone in examination centers. Shoes and belts are not allowed.

414 prison inmates writing the exam

With the Plus-2 exam set to begin today (Thursday), inmates are also set to write the exam. That is, 73 candidates will appear for the Plus-2 exam, 99 for the Plus-1 exam and 242 for the SSLC exam. A total of 414 prisoners are writing this exam. This includes 186 male prisoners and 28 female prisoners.

What is the penalty for coffee?

During the examination, if the candidates possess or use the objectionable material, the examination of that day will be canceled and they will be barred from writing the examinations for the next year, i.e. two semesters.

If the examiner looks at someone else’s answer sheet or writes the exam with the help of others, the exam will be canceled and he will be barred from writing the exam for the next two semesters for one year or more depending on the situation.

In case of impersonation, the seasonal exam will be canceled and a permanent ban on writing the exam will be imposed.

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

இன்று துவங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகத்தில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அறிக்கப்பட்டது..

1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், “ஆன்லைன்” வகுப்புகள் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

நேரடி வகுப்புகள் தொடக்கம்

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு, அதைத் தொடர்ந்து 6 முதல் பிளஸ்-1 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு, 1 முதல் 5ம் வகுப்பு வரை மற்றும் அதனை தொடர்ந்து மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 2021-2022 கல்வியாண்டுக்கான வகுப்புகள் தாமதமாகத் தொடங்குவதால், மாணவர்கள் தேர்வை சந்திக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு ஏற்பாடுகள்

பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்ததால், விடுமுறை இல்லாமல் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்பட்டன. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாவிட்டாலும், மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன மற்றும் திருப்புதல் தேர்வும் நடத்தி முடித்தனர்.

தற்போது, கொரோனா பரவல் குறைந்தாலும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு கட்டாய பொதுத்தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித்துறை உறுதியாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்

தேர்வு மையங்கள், பறக்கும்படை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடக்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு,  நாளை (6ம் தேதி) முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு வரும் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைய உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் நடைபெற உள்ளது.  இத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் எழுதுகின்றனர். இதில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் அடங்குவார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. – பிளஸ்-1 தேர்வு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மொத்தம் 3,936 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 மாணவர்களும், 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 மாணவிகளும் அடங்குவர்.

அதேபோல், பிளஸ்-1 பொதுத் தேர்வு 3,119 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். இதில், 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் அடங்குவார்கள்.

1,000 பறக்கும் படைகள் அமைப்பு

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் மொத்தம் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுத உள்ளனர். இதில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 3 மாணவர்களும் அடங்குவர். மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க 1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலணிகள் மற்றும் பெல்ட்களுக்கு அனுமதி கிடையாது .

தேர்வு எழுதும் 414 சிறை கைதிகள்

பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்க உள்ள நிலையில், கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர். அதாவது, பிளஸ்-2 தேர்வை 73 பேரும், பிளஸ்-1 தேர்வை 99 பேரும் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 242 பேர் எழுத உள்ளனர். இந்தத் தேர்வை மொத்தம் 414 கைதிகள் எழுதுகிறார்கள். இதில் 186 ஆண் கைதிகளும் 28 பெண் கைதிகளும் அடங்குவர்.

காப்பி அடித்தால் என்ன தண்டனை?

தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து அல்லது பயன்படுத்தி இருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.

தேர்வு எழுதுபவர், வேறொருவரின் விடைத்தாளைப் பார்த்தாலோ அல்லது மற்றவர்களின் உதவியோடு தேர்வு எழுதினாலோ, தேர்வு ரத்து செய்யப்பட்டு, சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த இரண்டு செமஸ்டர்களுக்கு ஓராண்டு அல்லது அதற்கு மேல் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். 

ஆள்மாறாட்டம் செய்தால், பருவகால தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.