The notes written by the scientist Darwin who was stolen 22 years ago have been recovered ..!

Charles Darwin, the scientist who is still famous for his theory of evolution from ape. Two of his notebooks were preserved at the University of Cambridge, England, where he studied. But, his books were stolen from there 22 years ago. The BBC reported about this. In a special message, 15 months ago, there was a worldwide appeal for the return of those who took these.

In this case, the notebook, the original blue box in which they were kept, and the brown envelope were left in a pink gift bag by someone at the University of Cambridge. Those who left it, also wished the librarian of that university, Easter greetings.

University librarian Dr. Jessica Gardiner said, “I’m very pleased that the books are safe, in good condition, and in their own home.”

22 ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டுப்போன விஞ்ஞானி டார்வின் எழுதிய குறிப்புகள்  திரும்பக்கிடைத்துள்ளன..!

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பரிணாம வளர்ச்சி கொள்கையால் இன்றளவும் புகழ்பெற்றிருப்பவர், விஞ்ஞானி சார்லஸ் டார்வின். இவர் கைப்பட எழுதிய 2 நோட்டுப்புத்தகங்கள், அவர் படித்த இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் புத்தகங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து திருட்டு போனது. இதுபற்றி பி.பி.சி. சிறப்பு செய்தியில், இவற்றை எடுத்தவர்கள் திரும்பத்தந்து விடுமாறு உலகளாவிய வேண்டுகோளை 15 மாதங்களுக்கு முன்பு விடுத்தது. 

இந்நிலையில், நோட்டுப் புத்தகம், அவை வைக்கப்பட்டிருந்த அசல் நீல நிறப்பெட்டி,  பழுப்பு நிற உறை ஆகியவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் யாரோ ஒருவரால் இளஞ்சிவப்பு நிற பரிசுப்பையில் வைத்து  விட்டுச் சென்றுள்ளனர். அதை விட்டுச்சென்றவர்கள், அந்த பல்கலைக்கழகத்தின் நூலகருக்கு, ஈஸ்டர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

இது பற்றி பல்கலைக்கழக நூலகர் டாக்டர் ஜெசிகா கார்டினர் கூறுகையில் “நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அந்த புத்தங்கங்கள் பாதுகாப்பாக உள்ளன. நல்ல நிலையில் இருக்கின்றன. தங்கள் வீட்டில் உள்ளன” என குறிப்பிட்டார். சார்லஸ் டார்வின் பரம்பரை பற்றிய ஓவியத்தை உள்ளடக்கிய இந்த நோட்டு புத்தகங்கள் பல மில்லியன் பவுண்ட் மதிப்பு மிக்கவை என்று கூறினார் .

Leave a Reply

Your email address will not be published.