The next day we can see the rare sight of the sun setting and the moon rising at the same time in Kanyakumari !!

Pavurnami which falls in the month of Chittirai is called Chitra Pavurnami. This year Chitra Pavurnami is coming 16.4.2022 (Saturday). The moon rises at 6 pm on that day when the sun sets over the Kanyakumari sea. These two scenes occur simultaneously. This event will be a sight to behold.

Tourists are expected to flock to Kanyakumari to see this rare sight. The sun sets in the Arabian Sea in the west and the Moon rises in the Bay of Bengal in the east. You can enjoy this rare sight from places including Kanyakumari Mukkadal Sangamam and Sunset Point.

கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி நாளை மறுநாள் காணலாம் !!

சித்திரை மாதம் வரும் பவுர்ணமியை  சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி  16.4.2022 (சனிக்கிழமை) வருகிறது. அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகிறது. இந்த இரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. இந்த நிகழ்வு  பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த அரிய காட்சியை காண கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் அரபிக்கடலில் சூரியன் மறையும், கிழக்குப் பகுதியில் வங்கக் கடலில் சந்திரன் உதயமாகும். கன்னியாகுமரி முக்கடல் சங்கம் மற்றும் சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் நின்றும் இந்த அரிய காட்சியை கண்டு ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.