தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில் போட்டு விட்டு காத்திருக்கிறார்.

மீன் அவரது தூண்டிலில் சிக்குவதற்குள், மீன் ஒன்று தண்ணீரில் இருந்து குதித்து அந்த மனிதனின் தொண்டையில் விழுந்தது. 5 அங்குல நீளமுள்ள மீன் மூக்கு வழியாக வெளியேற முயற்சித்து முன்னேறுகிறது.

ஆனால், குறுகிய பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டை மற்றும் சுவாச குழிக்கு இடையில் மீன் சிக்கியது. இதனால், ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டது.

இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக பிடித்து கொண்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 

இது குறித்து மருத்துவமனை அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறுகையில், தண்ணீரில் இருந்து மீன் ஒன்று குதித்து தொண்டையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதுபோன்ற விஷயங்களை நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை.

எங்களின் நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் டாக்டர்கள் செயல்பட்டனர். அவர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தின் ஆவோ டான் கூ கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்டிருந்த நோபோடோல் சிருங்கம் என்ற சுற்றுலாப் பயணியின் தொண்டையில் ஊசி மீன் குத்தியது. இதில், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

The fish that jumped into the throat of the person who put the bait … Strange incident !!

A person has gone to the province of Patalang in Thailand with the intention of fishing with bait. For this he puts the bait in the water and waits to leave.

Before the fish got caught in his bait, one of the fish jumped out of the water and fell into the man’s throat. The 5-inch-long fish moves forward trying to exit through the nose.

But, in the narrow area I could not come out. The fish was trapped between the throat and the respiratory cavity. Thus, the flow of oxygen was blocked.

The suffocated person clenched his throat. He was immediately rushed to hospital. They took an X-ray of him. The exact location where the fish was trapped was identified and emergency surgery was performed.

According to hospital official Chermsree Pathombanigrad, the chances of a fish jumping out of the water and getting stuck in the throat are slim. I had never heard of such things before.

The doctors acted in such a way that none of our patient’s organs were affected. He is said to have been rescued.

In March this year, a tourist named Nobodol Sirungam, who was swimming on the beach in Ao Tan Koo, Thailand, was stabbed in the throat by a fish. In this, his health deteriorated.

Leave a Reply

Your email address will not be published.