The boy who was an obstacle to fake love was brutally murdered

A 10-year-old boy was brutally murdered on February 8 at the foot of a hill near Kotleti village in Bargur taluka of Krishnagiri district. Bargur police are investigating. The murdered boy had bruises and burns on his body with a bald head. The police investigation revealed several criminal incidents after the murder.

Bangalore PTM Dhanalakshmi, a resident of Lay Out area, had lodged a complaint with her daughter Shoba at the Mico LayOut police station on August 25. In it, he mentioned that his other daughter Nadia’s son Rahul has been missing since last February. Following this, the police registered cases of disappearance in February and when they saw the photos, they confirmed that it was Rahul from Bangalore when they showed the photo of the boy who was killed in Bargur.

Following this, it was revealed that the boy Rahul was killed by his mother Nadiya, false lover Sunilkumar and his other false girlfriend Sindhu. All three were subsequently arrested by the Bangalore police. Later, when the arrested Sunil Kumar was questioned, many startling information came out.

He married Nadia and Ravi and had a baby Rahul. When he was 3 months old, Ravi left Nadia due to a disagreement and after that there was a fake relationship between Sunil Kumar and Nadia. Rahul is considered to be an obstacle to this. Thus he was occasionally beaten and tortured with a broom. Meanwhile, Sunil Kumar and Sindhu, who live in the same area, were involved in a scam. Sunilkumar has been living happily with Nadiya and Sindhu.

In this situation, Nadia went to do vegetable business on February 7 last. Then Sunil Kumar hit the boy Rahul and the boy died. Following this, Sunil Kumar and Sindhu left Rahul’s body in the back of the car and went to Kotleti on the border of Krishnagiri district, dumped the body at the foot of the hill and fled. The details were later told to Nadia. Following this, the police arrested all the three and lodged them in the Bangalore jail.

தமிழ்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் கொடூரமான முறையில் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கொட்லேட்டி கிராமம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட சிறுவன் மொட்டை தலையுடன் அவனது உடலில் பிரம்பால் அடித்த காயங்கள், தீப்புண்கள் இருந்தன. போலீசாரின் விசாரணையில் இந்த கொலைக்கு பின் பல குற்ற சம்பவங்கள் வெளிவந்தன.

பெங்களூரு பி.டி.எம். லே அவுட் பகுதியில் குடியிருந்து வரும் தனலட்சுமி, தனது மகள் ஷோபாவுடன் மைக்கோ லே அவுட் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மற்றொரு மகள் நதியாவின் மகன் ராகுல் என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக பதிவான வழக்குகள், புகைப்படங்களை பார்த்ததில் பர்கூரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவனின் புகைப்படத்தை காண்பித்த போது அது பெங்களூருவை சேர்ந்த ராகுல் என உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுவன் ராகுலை அவனது தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார், இவரது மற்றொரு கள்ளக்காதலி சிந்து ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான சுனில்குமாரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

நதியாவிற்கும், ரவிக்கும் திருமணமாகி குழந்தை ராகுல் பிறந்தான். அவனுக்கு 3 மாதம் இருக்கும் போது ரவி கருத்து வேறுபாடு காரணமாக நதியாவை விட்டு பிரிந்து சென்றதாகவும், அதன் பிறகு சுனில் குமாருக்கும், நதியாவிற்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ராகுல் இடையூறாக இருப்பதாக கருதியுள்ளனர். இதனால் அவனை அவ்வப்போது பிரம்பால் அடித்தும் சூடு வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இதற்கிடையே சுனில் குமாருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் சிந்து என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. சுனில்குமார் நதியாவுடனும், சிந்துவுடனும் உல்லாசமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நதியா காய்கறி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுனில் குமார் சிறுவன் ராகுலை அடித்ததில் சிறுவன் இறந்து விட்டான். இதையடுத்து காரில் ராகுலின் உடலை பின்னால் வைத்து சுனில் குமாரும் சிந்துவும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியான கொட்லெட்டி சென்று மலை அடிவாரத்தில் உடலை வீசி விட்டு தப்பி சென்றனர். இந்த விவரத்தை பின்னர் நதியாவிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் பெங்களூரு சிறையில் அடைத்தனர்.

Thanglish

kalakathaluku edaiyuraga iruntha siruvan koduramana muraiyil kolai

Krishnagiri maavatam Bargur thaluka Kotleti kiramam arukae ulla malai adivarathil February maatham 8 aam thethi 10 vayathu mathikathakka siruvan koduramaga kolai seiyapattu kidanthan. Ethu kurithu Bargur polisar visaranai nadathinargal. Kolai seiyaptta siruvan mottai thalaiyudan avanathu udalil perambal aditha kayangal, thipungal irunthana. Polisarin visaranaiyil intha kolaiku pin pala kutra sambavam velivanthana.

Bengaluru PTM layout pakuthiyil kudiyiruthu varum Dhanalakshmi, thanathu makal Shobaudan Mico LayOut kaval nilayathil kadantha august maatham 25 aam thethi pukar manu alithullathar.Athil thanathu matroru magal nathiyavin makan rahul enpavanai kadantha February maatham muthal kanavilai endru kuripitturunthar.Ethaiyeduthu polisar February maatham kanamal ponathaga pathivana valakugal, pugaipadangalai parthathil Barguril kolai seiyapattu kidantha siruvanin pukaipadathai kanpitha pothu athu Bengalurvai serntha rahul Ena uruthi seithanar.

Ethai thodarnthu siruvan rahulai avanathu thaai nathiya, kalakathalan sunilkumar, Ivarathu matroru kalakathali Sindhu aakiyor kolai seithathu theriya vanthathu. Ethaiyeduthu avargal 3 peraiyum Bengalur polisar kaithu seithanar. Pinnar kaithana Sunilkumaridam vesaritha pothu pala thidukidum thakavalgal velivanthana.

Nathiyavirukum, ravikum thirumanamaki kuzhanthai rahul piranthan. Avanuku 3 maatham irukum pothu ravi karuthu verupadu karanamaga nadhiyavai vittu pirinthu sendrathakavum, athan piraku sunil kumarukum, Nadhiyavirukum edaiyae kala thodarupu erupattulathu. Etharuku rahul edaiyuraga irupathaga karuthiyullanar. Ethanal avanai avvapothu pirambal adithum sudu vaithum sithiravathai seithullanar. Etharkidaiyae sunil kumarukum,athay pakuthiyil vasithu varum sindhu evapavrukum kala thodarupu erapattathu. sunilkumar nathiyaudanum, sindhudanum  ullasamaga vazhkai nadathi vanthullar

Innlayil kadantha February 7aam thethi nadhiya kaikari veyaparam seiyvatharakaga sendrullar. Apothu sunil kumar siruvan rahulai adithathil siruvan irunthu vittan. Ethaiyeduthu karil Rahulin udalai pinnal vaithu sunil kumarum sindhuvum Krishanagiri maavata  ellai pakuthiyana Kotleti sendru malai adivarathil udalai vesi vittu thappi sendranar. Intha vivarthai pinnar nadhiyavidam kuriyullanar. Ethanaieduthu avarkal 3 peraiyum kaithu seitha polisar Bengaluru siraiyil adaithanar.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.