சுகன்யா சம்ரிதி திட்டம்

பெண் குழந்தைகளின் நலத்தினை கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் படி இந்தியாவில் உள்ள தபால் நிலையத்திலோ அல்லது எந்தவொரு வங்கியிலோ 10 வயத்திற்குற்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கை தொடங்கலாம் எனவும் அக்குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும் என்றும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும் எனவும் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வைப்புத்தொகையயாக செலுத்தலாம் என்றும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 01-04-2020 முதல் ஒரு ஆண்டுக்கு 7.6% சதவிகிதம் வட்டி வழங்கப்படும் எனவும் இக்கணக்கில்  கூறப்பட்டுள்ளது. மேலும், முதிர்வு தொகையாக 21 ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம் எனவும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவிற்காக கணக்கில் உள்ள தொகையில் 50% சதவிகிதம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.