Statue of the goddess Corona worshiped to destroy the corona

Corona virus infection is causing the worst impact worldwide. Many adolescents have fallen victim to the worst form of corona in India. Vaccines and drugs are being studied around the world to control corona disease. The idol of Goddess Corona will be erected at the 51st Shakti Peedam of Kamatchipura Aadeenam in Irukkur area of ​​Coimbatore and will be dedicated 48 days after the special puja. According to a report by Kamatchipuri Aadeenam Sri Sivalingeswara, the covid 19 virus is affecting the population. We have designed the statue of Goddess Corona. The statue of Blake Mariamman was designed and worshiped when the plague spread. They worshiped the goddess to save themselves when a deadly disease like cholera and plague came. Similarly, we have designed a statue of Goddess Corona to stop the coronation of Corona and we will perform the Maha Yagya for 48 days. He said that the worship of Goddess Corona will take place in the same way as the worship of Mariamman and Mahakali.

கொரோனாவை அழிக்க வழிபடும் கொரோனா தேவி சிலை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் பரவிய உருமாறிய கொரோனா மிகவும் மோசமான தாக்குதலை தொடுத்து வருவதால் அதற்கு இளம் வயதினர் பலர் பலியாகி உள்ளனர். கொரோனா நோயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசிகள் மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51வது  சக்தி பீடத்தில் கொரோனா தேவி எனும் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு  பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா தெரிவித்த அறிக்கையில் covid 19 என்ற வைரஸ் மக்களை பெரிதும் பாதித்து வருகிறது இதை  கொரோனா தேவி சிலையை வடிவமைத்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொடிய நோய் வந்தபோது தங்களை காப்பாற்ற அம்மனை வழிபட்டது வரலாறு கடவுள் மட்டுமே ஒரே  நம்பிக்கை என்ற நிலையில் இதுபோன்ற சிலாகை வடிவமைக்கப்பட்டு வழிபட்டனர். அதேபோன்று கொரோனாவின் கோரத்தாண்டவத்தை நிறுத்த கொரோனா தேவி சிலையை வடிவமைத்துள்ளோம் மேலும் இதற்கு 48 நாட்கள் மகா யாகம் நடத்தி வழிபடுவோம் மக்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கோவில் பூசாரிகள் மட்டுமே  நடத்துவார்கள். மாரியம்மன் , மகாகாளி வழிபாட்டை போலவே கொரோனா தேவி வழிபாடும் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.