தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்காக கொடுத்த சௌமியாவுக்கு இரண்டே நாளில் வேலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக  சேலம் சென்றிருந்தார். சேலத்திலிருந்து மேட்டூருக்கு காரில் பயணம் செய்தபோது, வழியில் நின்றிருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுவோடு தனது கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்கு என்று குறிப்பிட்டு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்த்தவர்தான் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சௌமியா.

ஜூன் 13ம் தேதி முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் ‘மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளதோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்து செளமியாவின் கடிதத்தையும் இணைத்திருந்தார்.

முன்னதாக செளமியா தனது கோரிக்கை மனுவில், “நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு இரண்டு அக்கா. அவர்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த ஆண்டு எனது அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். அம்மாவின் மருத்துவச் செலவுகளால் எனது அப்பாவின் சேமிப்பு பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. தற்போது அப்பாவுக்கு ஓய்வூதியமாகக் கிடைக்கும் 7000 ரூபாயில் மூவாயிரம் ரூபாய் வாடகையாகச் செலவாகிறது. மீதமுள்ள நாலாயிரம் ரூபாயில்தான் குடும்பம் இயங்கி வருகிறது. நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். நான் அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால்கூட உதவியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

செளமியா கோரிக்கை மனுகொடுத்த இரண்டே நாள்களில்,(15.06.2021) அமைச்சர் செந்தில் பாலாஜியும், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகமும் செளமியாவின் வீட்டிற்கே சென்று வேலை வாய்ப்புக்கான கடிதத்தை வழங்கியுள்ளனர். செளமியா வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள JSW Steel நிறுவனத்தில் செளமியாவுக்கு அலுவலக பணிக்கான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மாத சம்பளமாக 17,000 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தொலைபேசி வாயிலாக செளமியாவிடம் பேசி வாழ்த்தும் தெரிவித்தார்.

Soumya, who donated the gold chain to the Corona Fund, worked for two days

Chief Minister MK Stalin had gone to Salem on June 12 for the inauguration of the Mettur Dam. While traveling by car from Salem to Mettur, he received petitions from people standing in the way. Soumya, a young woman from Pottaneri village in Mettur district of Salem district, was the one who drew the attention of Chief Minister Stalin by presenting a two pound gold chain around her neck to the Corona Fund with a petition.

On June 13, the Chief Minister took to his Twitter account to draw attention to Soumya’s letter on the petitions received during his visit to open the Mettur Dam. His generosity in times of calamity and his willingness to help make the heart flutter. Appropriate action will be taken to get the dolls a job suitable for her studies soon, ”he added.

Earlier, in her petition, Selamia said, “I am a B.E. Computer Science graduate. My father is a retired employee of Avin. I have two sisters. They are married. My mother died of an illness last year. At present my father’s pension of Rs.

Within two days of Selamia’s petition, Minister Senthil Balaji and Salem District Administrator Karmegam visited Selamia’s house and handed over a letter of employment. JSW Steel has offered her an office job at JSW Steel. He will get a monthly salary of 17,000 rupees.

Following this, the Chief Minister M.K. Stalin also spoke to Selamia over the phone and congratulated her.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.