மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
Senior Citizen Saving Scheme Audio News

இத்திட்டத்தில் கணக்கு தொடங்கும் போது டெபாசிட் செய்யும் தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை என்றால் பணமாகவே செலுத்தி கணக்கை தொடங்கலாம் எனவும் அதற்கு மேலாக இருந்தால் காசோலையாக செலுத்த வேண்டும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 7.4% சதவிகிதம் வட்டி இதில் கிடைக்கும் எனவும் இத்திட்டத்தில் சேர விரும்புகிறவர்களுக்கு வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது . மேலும் 55 வயதிற்குமேல் 60 வயதிற்குள் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஓய்வு பெற்றிருந்தாலோ இத்திட்டத்தில் சிறப்பு அனுமதி கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 50 ஆண்டுகள் என்பதால் இந்த காலம் முடிந்து ஓராண்டுக்குள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் இல்லையெனில் கணக்கை முடித்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் மற்றொருவரை மரபுரிமையராக இணைக்கலாம் கணக்கு தொடங்கும் போதோ அல்லது தொடங்கிய பின்னராரோ இதனை செய்யமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஒரு வாடிக்கையாளரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை கையாள முடியும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது . மேலும் ஒரு தபால் நிலையத்தில் தொடங்கிய கணக்கை மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றி கொள்ள  முடியும் எனவும் இத்திட்டத்தில் அறிவித்துள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.