நாடு முழுவதும் இந்திய தபால் துறை பல்வேறு தபால் நிலையங்களை கொண்டுள்ளது. பொதுமக்களின் சேமிப்பு நலன் கருதி பல்வேறு சேமிப்பு திட்டங்களை வெவ்வேறு வட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு கணக்கை பற்றி விரிவாக பார்ப்போம். சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.500 செலுத்தவேண்டும் எனவும் அதிகபட்ச வரம்பு இல்லை எனவும் இதில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்ச நிலுவை தொகையை குறைக்கும் எந்தவொரு திரும்ப பெறுதலும் அனுமதிக்கப்படாது என்றும் ஒரு ஆண்டுக்கு 4% வட்டி வழங்கப்பட்டுவருகிறது என்றும் இதில் குறிப்பிட்டுள்ளது. மேலும் கணக்கில் இருப்பு இல்லாவிடில் கணக்கு தானாக மூடப்படும் எனவும் நிதியாண்டில் இறுதியில் ரூ.100 கணக்கு பராமரிப்பு கட்டணமாக கழிக்கப்படும் எனவும் இதில் அறிவித்துள்ளது.மேலும் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் நிதி அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டி கணக்கில் வரவு வைக்கப்படும். கணக்கு மூடப்பட்ட முந்தைய மாதம் வரை வட்டி செலுத்தப்படும் என்றும் தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டில் ஒரு கணக்கில் வைப்பு அல்லது திரும்ப பெறுதல் நடைபெறாவிட்டால் கணக்கு செயலற்றதாக கருதப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply