Russia-China-Iran joint military exercise in the Indian Ocean

Beijing

Russia, China and Iran have been involved in joint military exercises in the Indian Ocean. Russia, Iran and China have been involved in joint military exercises to reduce US dominance and increase their dominance in the Indian Ocean. The navies of these 3 countries last engaged in a joint military exercise in December 2019. Now, after a gap of 2 years, the resumption of hostilities by these countries has caused tension in the Indian Ocean. Eleven Iranian ships, three Russian ships and two Chinese warships took part in the exercise. According to military officials from 3 countries, the exercise is being conducted to ensure maritime security. They also said that the purpose of the joint exercise was to teach the soldiers a number of tactics such as how to recover a burning warship in the Mediterranean, how to free a hijacked ship, and how to properly hit targets during night time warfare.

இந்திய பெருங்கடல் பகுதியில் ரஷியா – சீனா – ஈரான் கூட்டு போர் பயிற்சி

பெய்ஜிங்

இந்திய பெருங்கடல் பகுதியில் ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்கவும், தங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் ரஷியா, ஈரான், சீனா இந்த கூட்டு போர் பயிற்சியில்  ஈடுபட்டன. இந்த 3 நாடுகளின் கடற்படைகளும் கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இப்போது 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுயிருப்பது இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பயிற்சியில் ஈரானின் 11 கப்பல்களும், ரஷியாவின் 3 கப்பல்களும் சீனாவின் 2 போர் கப்பல்களும் பங்கேற்றுள்ளது. இந்த கூட்டு ராணுவ பயிற்சி தொடர்பாக 3 நாடுகளின் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. மேலும் இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கம், ​​ நடுக்கடலில் தீப்பிடித்து எரியும் போர்க்கப்பலை எப்படி மீட்பது, கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பது, இரவு நேர போர் காலங்களில் இலக்குகளை சரியாக எப்படி தாக்குவது போன்ற பல போர் தந்திரங்கள் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.