ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.100 செலுத்தலாம் அதற்கு அதிகமாக முதலீடு செய்யும் போது அந்த தொகை ரூ.10 இன் பெருக்குத்தொகையாக இருத்தல் வேண்டும் எனவும் 01.04.2020 முதல் ஒரு ஆண்டுக்கு 5.8% சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது என்றும் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரு ஆர்டி கணக்கை மட்டுமே திறக்க இயலும்.ஒவ்வொரு காலாண்டிலும் (ஆண்டு விகிதத்தில்) வைப்பு தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது எனவும் இது ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு வட்டியுடன் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது.
கணக்கு முதிர்ச்சி அடைந்துவிட்டால் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பம் அளித்து கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும் எனவும் முதலில் கணக்கு திறக்கப்பட்ட வட்டி வீதமே நீடிப்பின் போது பொருந்தும் வட்டி வீதம் என அறிவித்துள்ளது. மேலும் ஒரு வேலை கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் உரிமைக்கோரல் அனுமதிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் சட்ட வாரிசுகள் கணக்கு முதிர்வு வரை கணக்கை தொடங்கலாம் என இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply