குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இக்கணக்கை திறக்கமுடியும் எனவும் ஒரு தனி நபர் ஒரு கணக்கினை மட்டுமே திறக்கமுடியும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தினை நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் அல்லது வங்கிகளில் ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்கமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சம் வரை வைப்பு தொகையாக செலுத்தலாம் என இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு நிதியாண்டிலும் குறைந்தபட்ச ரூபாயாக 500 செலுத்தப்படாவிட்டால் அந்த கணக்கு நிறுத்தப்படும் எனவும் நிறுத்தப்பட்ட கணக்குகளில் கடன் திரும்பப்பெறும் வசதிகள் இல்லை எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி 7.1% சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. கடன்கள் மற்றும் திரும்பபெறல்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வயதை பொறுத்து அனுமதிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளின்படி பிறவங்கிகளுக்கு அல்லது தபால் அலுவலகங்களுக்கு மாற்றலாம் இதற்கு சேவை கட்டணம் இலவசம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் அவர்களது வாரிசுகள் மேலும் கணக்கை தொடங்க அனுமதி இல்லை எனவும் இறப்பு காரணமாக கணக்கு மூடப்படும் நேரத்தில் வட்டி விகிதம் முந்தைய மாத இறுதி வரை கணக்கு மூடப்படும் வரை செலுத்தப்படும் என்றும் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply