Prime Minister Modi stranded on a bridge in Punjab for about 20 minutes

In Punjab, Prime Minister Narendra Modi’s vehicle got stuck in one place during a farmers’ road blockade protest. While the BJP has complained that the ruling Congress government planned and staged this, the Punjab Chief Minister has explained that there is no shortage of security for the Prime Minister. Prime Minister Narendra Modi flew to Bathinda Nagar to attend various functions in the state of Punjab. From there he was going to the Hussainiwala area by helicopter. Helicopter travel was abandoned due to rain and cloud cover and authorities arranged for Husseiniwala to travel by road. As the Prime Minister was walking along the road, information came to the notice of the security officials that the farmers had blocked the road about 30 km away. Thus the vehicles of Prime Minister Modi and those who traveled with him, got stuck on a flyover for about 20 minutes. Following this, the Prime Minister canceled his visit to Punjab and returned to Delhi. The incident has sparked a bitter war of words between the BJP and the Congress over the security of the Prime Minister. “I am back alive and I thank your chief for that,” Prime Minister Narendra Modi told Punjab airport officials. Speaking to reporters in Chandigarh at the same time, Punjab Chief Minister Saranjit Singh said they were unaware that he had changed the route he had already planned and traveled on a different route. He emphasized that the letter was not a signal of a formal antitrust inquiry into the allegations, but rather a signal of a formal antitrust inquiry into the allegations. However, the BJP has leveled serious allegations against the Congress party. Interior Minister Amit Shah took to Twitter to criticize the Prime Minister, saying “the security breach during the Prime Minister’s visit was not already possible and that it was done by Congress. It is an example of how the Congress party’s thinking and actions are. In retaliation, the Congress claimed that Prime Minister Modi had returned to Punjab due to insufficient crowds at his meeting. “Congress spokesperson Surjewala has criticized the Prime Minister’s Office, the Prime Minister and BJP ministers for not confirming the Prime Minister’s statement that he was” alive “and thanked his Chief Minister. Provided by intelligence the Home Ministry has accused the Punjab police of not following the information. With the Assembly elections in Punjab coming up soon, it seems likely that the Prime Minister’s car stop will have a major impact.

தமிழ் 

பஞ்சாபில் சுமார் 20 நிமிடம் பாலத்தில் சிக்கிய பிரதமர் மோடி 

உழவர்களின் சாலை மறியல் போராட்டத்தில் பஞ்சாபில் பிரதமர் மோடியின் வாகனம் ஒரே இடத்தில் சிக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் காங்கரஸ் அரசு திட்டமிட்டு இதை அரங்கேற்றியதாக பாஜக புகார் தெரிவிக்கும் நிலையில், பிரதமரின் பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுவதற்க்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் பதிண்டா நகர் சென்றார். அங்கிருந்து அவர் ஹெலிஹாப்டர் மூலம் ஹுசைனிவாலா பகுதிக்கு செல்லுவதாக  இருந்தது. மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக ஹெலிஹாப்டர் பயணம் கைவிடப்பட்டு , சாலை வழியாக ஹுசைனிவாலா செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சாலை வழியாக பிரதமர் சென்று கொண்டிருந்த போது 30 கிலோமீட்டர் தொலைவில் விவசாயிகள் சாலை முற்றுகையிட்ட தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் பிரதமர் மோடி மற்றும் அவருடன் பயணம் செய்தவர்களின் வாகனங்கள், சுமார் 20 நிமிடம் வரை ஒரு மேம்பாலத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து பிரதமர் தனது பஞ்சாப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, டெல்லி திரும்பினார். இச்சம்பவம் பிரதமரின் பாதுகாப்பு குறித்து, பாஜக மற்றும் காங்கரஸ் கட்சியினர் இடையே கடும் வார்த்தை போரை உருவாக்கியுள்ளது. “நான்  உயிருடன் திரும்பி இருக்கிறேன் அதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொன்னேன் ” என கூறிவிடுங்கள் என பிரதமர் மோடி பஞ்சாப் விமானநிலைய அதிகாரிகளிடம் காட்டமாக தெரிவித்ததாக எ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் ஏற்கனவே திட்டமிட்டுள்ள பாதையை மாற்றி வேறு பாதையில் பயணித்தது தங்களுக்கு தெரியாது என கூறினார். பிரதமரின் பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்ற அவர் பிரதமரை பாதுகாக்க தனது ரத்தத்தையும் சிந்தி இருப்பேன் என தெரிவித்துள்ளார். என்னினும் காங்கரஸ் கட்சி மீது பாஜகவினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ட்விட்டரில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா “பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை  ஏற்கவே முடியாது என்றும் இது காங்கிரசால் நிகழ்த்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். காங்கரஸ் கட்சியின் சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளும் எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்றும் அமித்ஷா விமர்ச்சித்துள்ளார். இதற்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ், பஞ்சாபில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த கூட்டத்தில் போதியளவு மக்கள் இல்லாத காரணத்தினாலே அவர் திரும்பி சென்று விட்டதாக கூறியுள்ளது. மேலும், “நான்  உயிருடன் திரும்பி இருக்கிறேன் அதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொன்னேன் என பிரதமர் கூறியது குறித்து, பிரதமர் அலுவலகமோ, பிரதமரோ, பாஜக அமைச்சர்களோ உறுதி செய்யவில்லை என காங்கரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா விமர்ச்சித்திருக்கிறார். இதனிடையே பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு பஞ்சாப் அரசு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய உளவுத்துறை அளித்துள்ள தகவல்களை பஞ்சாப் காவல்துறையினர் பின்பற்றவில்லை என உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. விரைவில் பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பிரதமர் கார் நிறுத்தப்பட்ட நிகழ்வு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published.