பி.எம்., கேர்ஸ் நிதியில் 850 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்

‘பி.எம்., கேர்ஸ்’ நிதியில் இருந்து நாட்டின் 850 இடங்களில், ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக, டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி கூறி உள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறுகையில்,  கொரோனா இரண்டாம் அலையின்போது, எங்கள் தரப்பில் பல்வேறு நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், தேவை ஏற்படும் நிலையில் மேலும் பல நடமாடும் மருத்துவ மனைகள் அமைப்பது உட்பட, அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.

மூன்றாம் அலை உருவானால், அந்த நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து மருத்துவ மனைகளும் தயாராக உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. இரண்டாம் அலை உருவானபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், 850 இடங்களில் ‘பி.எம்., கேர்ஸ்’ நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என அவர் கூறினார்.

PM, 850 oxygen production plants funded by CARE

DRDO Chairman Satish Reddy has said that oxygen plants are being set up at 850 locations across the country from ‘PM, Cares’ funds.

Satish Reddy, head of the Defense Research and Development Organization (DRDO), which was present at the science and technology event in Delhi yesterday, said that during the second wave of the Corona, temporary hospitals were set up in various cities on our side. In the fight against the coronavirus, we are ready to provide all assistance, including the establishment of more mobile clinics in case of need.

If a third wave emerges, all hospitals are ready to face that crisis. The Central Government is taking steps to that end. When the second wave formed, oxygen shortages were severe in various parts of the country. To address this, he said, oxygen production plants are being set up at 850 locations in various districts of the country from ‘PM, Cares’ funds.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.