Plan to replace cooking gas agent

The Ministry of Petroleum and Natural Gas has recently introduced a scheme for people in some cities, including Coimbatore, to change the cooking gas consumer agent of their choice. According to the federal government, the new scheme is designed to empower consumers. Through this facility people can avail the service from any distributor with the specific oil marketing company located in their area.

In the first phase, the project will be launched in Coimbatore, Chandigarh, Pune and Ranchi. According to the Ministry of Petroleum and Natural Gas, consumers can access the service through the oil companies’ websites, telephones and processors. The government has said.

சமையல் எரிவாயு முகவரை மாற்றிக் கொள்ளும் திட்டம்

கோயம்புத்தூர் உள்ளிட்ட சில நகரங்களில் மக்கள் தாங்கள் விரும்பும் சமையல் எரிவாயு  நுகர்வோர் முகவரை மாற்றிக்கொள்ளும் திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறது. நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வசதியின் மூலமாக மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட எண்ணெய் சந்தை படுத்துதல் நிறுவனத்துடன் எந்த ஒரு விநியோகஸ்தரிடமும் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக கோயம்புத்தூர், சண்டிகர், புனே, ராஞ்சி ஆகிய நகரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், தொலைபேசி, செயலிகள் மூலம் நுகர்வோர்கள் இந்த சேவையை பெறலாம் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.வீட்டில் இருந்தவாறே தங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை நுகர்வோர்கள் மாற்றிக்கொள்ள இந்த வசதி வழிவகை செய்கிறது மேலும் கடந்த மே மாதம் நடந்த சோதனை முயற்சியின் போது 55,759 விநியோகஸ்தர்கள் மாற்றல் கோரிக்கைகள் எண்ணெய் நிறுவனங்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.