Monkey Measles: The Federal Government has issued guidelines

Monkey measles has not yet entered India. However, as it is spreading in many countries, the Federal Ministry of Health has issued comprehensive guidelines to prevent it. It says: –

Appropriate safety procedures and appropriate safety equipment should be used when treating patients with monkeypox. Ingredients used by patients should not be used.

In case of eye irritation, eye pain, blurred vision, shortness of breath, chest pain, etc., the public should consult a doctor immediately.

Monkey measles victims and affected areas should be identified quickly. Isolate those involved to prevent further spread. Find and track those who have been in contact with them.

Suspected specimens of monkeypox should be sent to the National Virology Laboratory in Pune for confirmation. Those who come in contact with monkey flu sufferers should be monitored daily for 21 days from the day of infection.

Health workers who treat patients and those who are home alone should maintain good hygiene. Wear full armor. Similarly, all hospitals should closely monitor patients with symptoms of monkey flu. Governments should set up monitoring centers at the state level.

Even if someone in the state is diagnosed with monkeypox, information should be collected immediately on how it is spread and where the infected person came from. He said the state and union territory governments should take all necessary steps.

குரங்கு அம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி வருவதால் , அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தகுந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்கல், மூச்சுத் திணறல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து கண்டறிய வேண்டும். மேலும் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து கண்காணிக்கவும்.

குரங்கு அம்மை என்ற சந்தேகத்திற்குரிய மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பி உறுதிப்படுத்தப்பட வேண்டும். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்கு தினமும் கண்காணிக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் மற்றும் வீட்டில் தனியாக இருப்பவர்கள் கைகளை நல்ல சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். முழு கவச உடை அணியுங்கள். இதேபோல், அனைத்து மருத்துவமனைகளும் குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். மாநில அளவில் அரசுகள் கண்காணிப்பு மையங்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டாலும், அது எப்படி பரவுகிறது, பாதிக்கப்பட்ட நபர் எங்கிருந்து வந்தார் என்ற தகவல்களை உடனடியாக சேகரிக்க வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.