பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது –   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

சென்னை உள்ளிட்ட கொரானா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் நடைபெறும் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.

அதன் பிறகு பேட்டியளித்த அவர் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார். பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார்.

மேலும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் மட்டும்தான் இருக்கும் என்றும் மதிப்பெண் ஏதும் இருக்காது என்பதே எங்கள் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் 75% மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அந்த 75 சதவீத கட்டணத்தை 30 சதவீதம், 45 சதவீதம் என இரு தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Can’t decide on opening of schools for now – Minister of School Education Announcement!

Class XII enrollment is taking place in 27 districts with less corona impact, including Chennai. Education Minister Anbil Mahesh visited the enrollment of students at Ashok Nagar Government School, Chennai.

In an interview after that he said the textbooks for the students would be distributed within a week. He said the decision on opening schools could not be made at the moment and that online classes were the only solution.

“In our first round of talks, there will be only All Pass in the Class 10 mark certificate and no marks,” said Education Minister Anil Mahesh. Private schools charge only 75% of tuition fees. It has been advised that the 75 per cent fee should be charged in two installments of 30 per cent and 45 percent.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.