“Manjapai Baroda” becoming a trend in Madurai

Barota made in the form of turmeric has been well received by the general public in Madurai to create awareness about turmeric. The Government of Tamil Nadu has introduced the Manjapai project to reduce the use of plastic. Navaneetha Krishnan, the owner of a restaurant in Madurai, has introduced Manjapai Baroda to bring this project to the masses. Produces and sells barota in the form of handbags. It has been well received among the general public. He also raises awareness by giving yellow to everyone who comes to the shop and also by giving them face masks for free.

மதுரையில் டிரெண்ட் ஆகி வரும் “மஞ்சப்பை பரோட்டா “

மதுரையில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மஞ்சப்பை வடிவில் தயாரிக்கப்படும் பரோட்டா பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுக செய்து இருக்கிறது. இந்த திட்டத்தை மக்கள் இடையே கொண்டு சேர்க்கும் விதமாக மதுரையை சேர்ந்த உணவகத்தின் உரிமையாளர் நவநீத கிருஷ்னன் என்பவர் மஞ்சப்பை பரோட்டாவை அறிமுகம் செய்திருக்கிறார். கைப்பிடியுடன் கூடிய பையின் வடிவத்தில் பரோட்டாவை  தயாரித்து விற்பனை செய்கிறார். இது பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடைக்கு வரும் அனைவருக்கும் மஞ்சப்பை கொடுத்து முகக்கவசத்தையும் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published.