Share

Mahavatara Baba was an Indian monk. The exact history of this man is not yet known. But he was born in Parangipettai, a town on the coast between Cuddalore and Chidambaram. He was a Namboodiri, a Brahmin couple by the name of Vedaranya Iyer-Gyanampal. They had a son born to them by God on November 30, 203 AD. The baby was named Nagaraj. Karthika, who was born on fire, did not say that the child was going to give light to the human race.

The Namboodiri family from Kerala came to Parangipettai from there. He used to worship at a Shiva temple there. The temple, which was the abode of Lord Shiva, later became the abode of Lord Murugan and became known as the Muthukumarasamy Temple. The oldest temple is still in Parangipettai.

When the boy Nagaraj was five years old, he was abducted by a man at a festival at the Shiva temple. When the boy was taken to Calcutta, a scribe named Ramanandar saw the familiar radiance on the boy’s face and rescued the boy from Kayavan with a small sum of money.

Thus, Nagaraj had the opportunity to interact with the Sadhus at an early age. When he had the privilege of going to places like Kasi and Prayag, he was there with the Balkudi Babas. He had a good relationship with them and Kadirgama in Sri Lanka so he had the privilege of going to Kadirgama at the age of eleven and meeting Siddharth Boganatha. With Siddhartha Pokhara, he learned various yoga practices and meditations with the blessings of Pokhara, from under a sprawling palm tree.

Nagaraj, who came to the Pothika hill area at the age of sixteen, sat near the Parasakthi peetha near the Courtallam Nadar temple and performed severe penance for the Agathis. Agathiyar appeared before him as a result of meditation. He preached Kriyakundalini and sent him to Badrinath at the top of the Himalayas to meditate there. Nagaraj who went there attained supreme status through severe meditation, yoga practices and meditative practices and emerged as a Babaji. He has a separate temple at Chavakattupalayam near Nambiyur in Erode district.

Rajinikanth starrer ‘Baba’ is best known for his role in ‘Mahavathar Sri Baba’.

The Rig Veda and the Samaveda say that every human being should aim to go to Siddhasramam. But not everyone can get there easily. Only one in two thousand yogis will get that privilege. To illustrate how high the Siddhasrama is to go, let us tell a Mahabharata incident. Bhishma asked Krishna to go to Siddhasrama on the eve of death. After the end of the Bharat War, Daruma asked Damodar to go to the Siddhasramam. Earthlings will want to go to heaven and Vaikuntha. But those who are in Moksha and in the heavens will aspire to go to Siddhasramam. Not everyone can go in or out if they go. Mahavatar Babaji was one of the most important of the very few who had the right to take others into the Siddhasramam.

Guru’s Mahamantra

Devotees of Kriya Babaji worship him by chanting his mantra ‘Om Kriya Babaji Nama Shum’.

  • Om is Pranayama
  • Kriya is an action performed with full awareness.
  • Babaji is the transcendence of the Guru
  • Worship of ours
  • Shum is the Pranava sound that resonates within us.

Babaji’s texts:

Babaji’s Voice and Magic Unveiled Babaji’s Master Key to All, The Death of Death All three books were written by Neelakandan to tell Babaji.

Babaji, uncontrollable by time. Beyond nature and science. Because he is the heir of the God of protection! Let us surrender to Babaji. He will guard us.

தமிழ் 

மகாவதார பாபா

மகாவதார பாபா என்பவர் ஒரு இந்தியத் துறவி ஆவார். இவரை பற்றிய சரியாக வரலாறு இன்னும்  கிடைக்கவில்லை. ஆனால் இவர் கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் நடுவே கடலோரத்தில் உள்ள பரங்கிப்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர். இவர் வேதாரண்ய ஐயர்-ஞானம்பாள் என்ற நம்பூதிரி, பிராமண தம்பதியினர். இவர்களுக்கு  கி.பி.203ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கடவுளருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயர் சூட்டினர். கார்த்திகை தீபத்தன்று பிறந்த, அந்த குழந்தை  மானிட வர்க்கத்திற்கே  தான் ஒளி தரப்போகிறது என்று சொல்லாமல் சொல்லியது.

கேரளத்தைச் சேர்ந்த இந்த நம்பூதிரி குடும்பத்தினர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை வந்தனர். அங்குள்ள ஒரு சிவன் கோவிலில் அர்ச்சகம் செய்து வந்தார். சிவன் தலமாக இருந்த கோவில் காலப்போக்கில் முருகன் தலமாக மாறி , முத்துக்குமாரசாமி கோவில் என்று பெயர் பெற்றது. பழமையான அந்தக் கோயில் இன்றும் பரங்கிப்பேட்டையில் உள்ளது.

சிறுவன் நாகராஜுக்கு ஐந்து வயது இருக்கும்போது, சிவன் கோவிலில் நடந்த திருவிழாவில்  கயவன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டான். கல்கத்தாவிற்கு சிறுவனை தூக்கிச் சென்றபோது ராமானந்தர் என்னும் வேதவிற்பன்னர் ஒருவர், சிறுவனது முகத்தில் தெரிந்த தேஜஸைக் கண்டு, சிறிதளவு பணம் கொடுத்து கயவனிடமிருந்து சிறுவனை மீட்டார்.

இதனால், நாகராஜுக்கு சிறு வயதிலேயே சாதுக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. காசி, பிராயாகை போன்ற தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தபோது, அங்கே பால்குடி பாபாக்களோடு இருந்தார். அவர்களுக்கும், இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கும், நல்ல தொடர்பு இருந்ததால்  பதினொரு வயதிலேயே கதிர்காமம் சென்று சித்தர் போகநாதரை சந்திக்கும் பாக்கியம் பெற்றார். சித்தர் போகரோடு, விரிந்து படர்ந்த ஓர் ஆலமரத்தின் கீழ் இருந்து, போகரின் ஆசியோடு பல்வேறு யோக சாதனைகளையும், தியானக் கிரியைகளையும் கற்று கொண்டார். 

தமது பதினாறாவது வயதில் பொதிகை மலைப் பகுதிக்கு வந்த நாகராஜ், குற்றாலநாதர் கோயில் அருகில் உள்ள பராசக்தி பீடத்தின் அருகில் அமர்ந்து, அகத்தியரை வேண்டி கடுமையான தவம் புரிந்தார். தவத்தின் விளைவாக அகத்தியர் அவர் முன்னே தோன்றினார். 

கிரியாகுண்டலினியை உபதேசம் செய்து இமயத்தின் உச்சியிலுள்ள பத்ரிநாத்திற்குச் சென்று அங்கு தவம் இருக்கும்படி அனுப்பினார். அங்கு சென்ற நாகராஜ் கடுமையான தவத்தாலும், யோகப் பயிற்சிகளாலும், தியான முறைகளாலும் உன்னத நிலையடைந்து பாபாஜியாக இவ்வுலகிற்கு வெளிப்பட்டர். இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயமே உள்ளது. 

ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பாபா” திரைப்படத்தின் மூலம் பெரும்பாலானோர்களால் அறிந்துகொள்ளப்பட்டவர் “மஹாவதார் ஸ்ரீ பாபா”

ஒவ்வொரு மனிதனும் சித்தாஸ்ரமம் செல்வதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று ரிக்வேதமும், சாமவேதமும் சொல்கிறது. ஆனால் அங்கு எல்லோராலும் சுலபமாகச் சென்றுவிட முடியாது. ஆயிரம் யோகிகளில் ஓரிருவருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்குமாம் . சித்தாஸ்ரமம் செல்வது எந்த அளவிற்கு உயர்வானது என்பதை விளக்க வேண்டுமானால், மகாபாரத சம்பவம் ஒன்றைச் சொல்லலாம். பீஷ்மர் சாகும் தருவாயில் கிருஷ்ணனிடம் சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும் என்று கேட்டார்.பாரதப் போர் முடிந்ததும் தருமர், தாமோதரனிடம்  சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும் என்று தான்  கேட்டார். பூலோகவாசிகள் சொர்க்கமும், வைகுந்தமும் செல்ல விரும்புவார்கள். ஆனால், மோட்சத்திலும், விண்ணுலகிலும் இருப்பவர்கள் சித்தாஸ்ரமம் செல்லவே ஆசைப்படுவர். அதன் உள்ளே செல்லவோ, சென்று விட்டால் வெளியே வரவோ எல்லோராலும் முடியாது. சித்தாஸ்ரமத்திற்குள் பிறரை அழைத்துச் செல்லும் உரிமை பெற்ற வெகு சிலரில் மகாவதார் பாபாஜி மிக மிக முக்கியமானவர் ஆகும். 

குருவின் மகாமந்திரம்

க்ரியாபாபாஜியின் பக்தர்கள், ‘ஓம் க்ரியா பாபாஜி நம ஔம்’ என்னும் அவரின் மகாமந்திரத்தைச் சொல்லி வணங்குகிறார்கள். 

  • ஓம் என்பது பிரணவம்.
  • க்ரியா என்றால் முழு விழிப்புணர்வோடு செய்யப்படும் செயல்.
  • பாபாஜி என்பது குருவின் திருநாமம்,
  • நம என்றால் வணங்குதல்.
  • ஔம் என்பது நம் அகத்தினுள் ஒத்ததிரும் பிரணவ ஒலி.

பாபாஜியின் நூல்கள் :

பாபாஜியின் குரல் மற்றும் மாயவாதம் திறக்கப்பட்டதுஅனைவருக்கும் பாபாஜி மாஸ்டர் திறவுகோல், மரணத்தின் மரணம் என்ற மூன்று நூல்களும் பாபாஜி சொல்லச் சொல்ல நீலகண்டனால் எழுதப்பட்டது. 

பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும்  மற்றும் விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். ஏனென்றால் ,காக்கும் கடவுளான பரம்பொருளே அவர்! பாபாஜியிடம் சரணடைவோம். அவர் நம்மை  காத்திடுவார்.

Thanglish

Mahavatara Baba

Mahavatrara baba enbavar oru india thuravi aavar. Ivarai patriya sariyana varalaru innum kidaikavillai. Anal ivar cuddalorukum, chidambarathirkum naduve kadalorathil ulla parangipettai endra ooril piranthavar. Ivar vetharanya iyer – gnanambal endra nampoothiri, piramana thambathiyinar. Ivarkaluku ki.pi 203m aandu  november 30m thethi kadavularulal oor aan kuzhanthai piranthathu. Antha kuzhanthaiku nagaraj endru peyar suttinar. Karthikai theepathandru pirantha, antha kuzhanthai manida varkathirke than oli tharapokirathu endru sollamal solliyathu. 

Keralathai serntha intha nampoothiri kudumbathinar ankirunthu parankipettai vanthanar. Ankulla oru sivar kovilil archagam seithu vanthar. Sivan thalamaga iruntha kovil kalapokkil murugan thalamaga mari, muthukumarasami kovil endru peyar petrathu. Pazhamaiyana antha kovil endrum parangupettaiyil ullathu. 

Siruvan nagarajuku 5 vayathu irukum pothu, sivan kovilil nadantha thiruvizhavil kayavan oruvanal kadathi sellapattan. Kalkathavirku siruvanai thukki sendrapothu ramananthar ennum vethavirpannar oruvar, siruvanathu mugathil therintha thejasai kandu, sirithalavu panam koduthu kayavanidam irunthu siruvanai meetar.

Ithana;. nagarajuku siru vayathileye sathukaludan pazhakum vaypu kidaithathu. kasi, pirayagai pondra thalangaluku sellum pakkiyam kidaithapothu, anke palkudi papakalodu irunthar. Avargalukum, ilangaiyil ulla kathirkamathirkum, nalla thodarpu iruntathal 11 vayathileye kathirkamam sendru sithar poganatharai santhikum pakkiyam petrar. Sithar pogarodu, virintha padarntha oor alamarathin keezh irunthu, pogarin aasiyodu palveru yoga sathanaikalaiyum, thiyana kiriyaikalaiyum katru kondar. 

Thanathu 16 vayathil pothigai malai pakuthiku vantha nagaraj, kutralanathar kovil arukil ulla parasakthi pidathin arukil amarnthu agathiyarai vendi kadumaniyana thavam pirinthar. Thavathin vilaivaga akathiyar avar munne thondrinar. 

Kiriyakundaliniyai upathesam seithu imayathin uchiyilulla pathrinathirku sendru anku thavam irukumpadi anupinar. Anku sendra nagaraj kadumaiyana thavathalum, yoga payirchikalalum, thiyana muraigalalum unnatha nilaiyadainthu babajiyaga ivvilakirku velipattar. Ivaruku erode mavattam nampiyur aruke savakattupalaiyam endra uril oor thani alaiyame ullathu.

Rajinikanth avargal naditha “Baba” thiraipadathin moolam perumpalanorgalal arinthukollavattavar “magavathar sri baba” 

Ovvoru manithanum sithasramam selvathai latchiyamaga kolla vendum endru rikvethamum, samavethamum selkirathu. Anal angu elloralum sulapamaga sendruvida mudiyathu. Ayiram yokikalil oriruvaruku matume antha pakkiyam kidaikumam. Sithasramam selvathu entha alavirku uyarvanathu enbathai vilaka vendumanal, mahabharatham sambavam sellalam. Beeshmar sakum tharuvvayil kirushnanidam sithasramam sella vendum endru kettar. Paratha per mudinthathum tharumar, thamotharanidam sidhasramam sella vendum endru than kettar. Poologavasigal serkkamum, vaikunthamum sella virumbuvargal. Anal motchathilum, vinnulakilum irupavargal sithasramam sellave aasaipaduvar. Athan ulle sellavo, sendru vittal veliye varavo elloralum mudiyathu. Sithasramathirkul pirarai azhaithu sellam urimai petra veku silarin magavathar babaji miga miga mukkiyamanavar aakum. 

Guruvin maagamanthiram:

kriyababajiyin bakthargal “om kriya babaji nama olam ” endrum avrin magamanthirathai solli vanakukirargal.

  • om enbathu piranavam
  • kriya endral muzhu vizhipunarvodu seyyapadum seyal
  • babaji enbathu kuruvin thirunamam
  • nama endral vananguthal
  • olam enbathu nam akathinul othathirum piranava oli

Babajiyin Noolgal:

Babajiyin kural matrum mayavatham thirakapattathu anaivarukum babaji master thiravukol, maranathin maranam endra mundru noolgalum babaji sella sella neelakadanal ezhuthapattathu.

Babaji, kalathal katupadutha mudiyathavar. Iyagaikum matrum vinnganatyhirkum apparpattavar. Yen Endral, kakum kadavulana paramporule avar! babajiyidam saramadaivom. Avar namai kathiduvar. 

admin

Published by
admin

Recent Posts

Rapidly spreading venomous fever in the Kattumannarkoil area

The public is alarmed by the rapid spread of poisonous fever in the Kattumannarkoil area.…

3 days ago

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a…

3 days ago

Classical Tamil Awards in the Name of Karunanidhi – Chief Minister Stalin

From 2010 to 2019, 10 scholars for 10 years were selected by the award selection…

3 days ago

Netaji statue at India Gate – Prime Minister Modi’s announcement

Prime Minister Modi has announced that a statue of Netaji Subhash Chandra Bose will be…

5 days ago

Who put secret cameras in the temple bathroom .. ?? Police intensified the investigation on the 2nd day

Police have also decided to investigate persons who were suspected by the temple priest of…

5 days ago