மாஞ்சோலை தொழிலாளர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று

மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை அல்லது தாமிரபரணி படுகொலை நிகழ்ந்த  நாள் இன்று…

Massacre of Manjola workers

 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தேதி திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு  நடத்திய பேரணியின் போது காவல் துறையினர் நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.

 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் அன்று  புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அவர்களுக்கு  நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர். 

காவல்துறையினர் பேரணியை வழி நடத்தி வந்த அரசியல் கட்சித் தலைவர்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் காவல்துறைக்கும், மக்களுக்கு இடையே  மோதல் ஏற்பட்டது. அதனால் காவல்துறை திடீரென தடியடியில் ஈடுபட்டது.  தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு இருந்ததால் தப்பிக்க வழிதேடி பெரும்பாலானோர்  தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்தனர். இதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் பலியாகினர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில்  காயமடைந்தார்கள்.

Today is the day that seventeen Manjola workers were massacred

Today is the day of the massacre of Manjola workers or the Tamiraparani massacre.

Seventeen people were beaten to death by police during a rally on July 23, 1999, in Tirunelveli, demanding a pay rise for Manjolai tea plantation workers.

 On July 23, 1999, the new Tamil Nadu party leader, Krishnaswamy, and its allies, the TMC, left-wing parties and Islamic organizations led by tea plantation workers received a wage increase of seventy to one hundred rupees a day, while women were on maternity leave. They marched to the Tirunelveli district administration’s office to demand leave, eight hours’ work and the release of 652 previously arrested workers.

The conflict between the police and the people of the police and the people who refused to allow the political party leaders to lead the police rally. So the police suddenly got involved in the beating. The wall was erected on one side of the wall where the attack took place, and on the other side there was the Tamiraparani River so most people jumped into the Tamiraparani River in search of an escape route. Seventeen people of various castes and religions were killed, including Vignesh, a one-and-a-half-year-old child. More than 500 people were injured in the incident, including government officials and a journalist.