ஏழை விவசாயிகளுக்காக கொண்டுவந்துள்ள இத்திட்டம் 1988 இல் இந்திய அஞ்சலத்துறையால் துவக்கப்பட்டுள்ளது. அஞ்சலகத்தில் ரூபாய் 1000, 5000,10,000 மற்றும் 50,000 மதிப்புடைய முதலீட்டு பத்திரங்கள் கிடைக்கும் எனவும் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 செலுத்தலாம் அதிகபட்ச வரம்பு இல்லை எனவும் கூட்டு கணக்காகவும் திறக்கலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது 01.04.2020 முதல் ஆண்டுக்கு 6.9% சதவிகிதம் வட்டியை அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 100 மாதங்களில் முதலீட்டின் மதிப்பு இருமடங்காக உயரும் எனவும் இடைபட்டக்காலத்தில் முதலீட்டு பத்திரத்தின் பணம் வேண்டும் எனில் 30 மாதங்கள் கழித்துத்தான் பெறமுடியும் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு வேலை கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் உரிமைக்கோரல் அனுமதிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் சட்ட வாரிசுகள் முதிர்வு வரை கணக்கை தொடங்கலாம் என இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply