Share
Facebook

மிளகு (பைப்பர் நிக்ரம்) என்பது பைப்பரேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடியாகும். ஒரு காலத்தில் தங்கத்தை விடவும் விலையுயர்ந்த உணவுப் பொருள் ஒன்று உள்ளது என்றால் அது மிளகு தான். இதனால் நமது பாரதநாட்டின் மீது மற்ற நாடுகள் படையெடுக்க காரணமாக இருந்தது. மிளகின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் உணவில் சுவை சேர்க்க மிளகையை அடிப்படையாக பயன்படுத்தினர். இந்த மிளகு அன்றும் இன்றும் நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய பொருளாக உள்ளது.

மிளகு கொடி

மிளகு கொடி சுமார் நான்கு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தாவரமாகும். இது ஊர்ந்து செல்லும் கொடி வகை மற்றும் அருகிலுள்ள மரங்கள், கம்பங்கள் மற்றும் கயிறுகளில் ஒட்டிக்கொள்ளும். அடர்ந்த பட்டையுடன் கூடிய மரத்தில் இதன் கொடி 10-12 அடி வரை வளரும். முக்கியமாக மல்பெரியில், இந்த கொடிகள் மரங்களை பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். மிளகு இலைகள் வெற்றிலை போல் பெரியவை. இந்த தாவரத்தின் இலைகள் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் வரை நீளமும், மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலமும் கொண்டவை. இதன் கணுக்கள் பசுமையாகவும் மற்றும் சற்று விரிந்த கொடிவுடனும் இருக்கும் . அதன் சிறிய பூக்கள் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி போன்ற தண்டுகளில் பூக்கும். பூக்கள் காய்களாக உருவாகும்போது, இம்மலர் தண்டுகள் சுமார் 15 செ.மீ ஆக இருக்கும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30க்கு மேல் இருக்கும். அவர்கள் அதை பச்சையாக எடுத்து அதன் நிறம் மாறாமல் செயலாக்குகிறார்கள். பழுத்த பழங்களைப் பறித்து வெயிலில் நன்கு காயவைத்தால் அது கருமிளகாயாக மாறும். இதுதான் மிளகு.

மிளகு வகைகள்

மிளகு நிறத்தின் அடிப்படையில் பல வகைகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் சிறிய வேறுபாடுகள் உள்ளன. மிளகின் வேறுபெயர்கள்,

வெண் மிளகு
கருமிளகு
பச்சை மிளகு
சிவப்பு மிளகு

மிளகின் வேறு பெயர்கள்

மிளகை, மலையாளி மக்கள் குறுமிளகு மற்றும் கோளகம் என்றும் பெயர்கள் இட்டு அழைக்கின்றனர். தமிழகத்தில் மிளகு என்றும், கேரளத்தில் குறுமிளகு என்றும், கர்நாடகத்தில் மேனசு என்றும், கொங்கணியில் மிரியாகொனு என்றும், ஆந்திராவில் மிரியம் அல்லது மிரியாலு என்றும் அழைக்கின்றனர்.

வால் மிளகு

வால் மிளகு என்பது கொடியின் மீது வளரும் ஒரு வகை மூலிகையாகும். மிளகை ஒத்த ஆனால் காம்புடன் இருக்கும் ஒரு வகை மிளகு , எனவே இதற்கு வால் மிளகு என்று பெயர். இதனை அதன் வாசனைக்காக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது மருத்துவ குணம் கொண்டது. இதன் காரத்தன்மை காரணமாக பசியைத் தூண்டி உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.

மிளகின் வரலாறு

16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜாவா, சுமத்ரா, மடகாஸ்கர், இந்தோனேசியா மற்றும் பல கிழக்கு ஆசிய நாடுகளில் தீவுகளில் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதிகளில் விளையும் மிளகு சீனாவிலும் உள்நாட்டிலும் விற்கப்பட்டதால், ஐரோப்பாவின் மிளகு வர்த்தகம் இந்தியாவைச் சார்ந்திருந்தது. மிளகு மற்றும் இதர மசாலாப் பொருட்களின் அதிக உற்பத்தி உலக வரலாற்றை மாற்றியமைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் உயர்த்தியதால் தான் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது. ஐரோப்பிய குடும்பங்களில், ஒரு பெண் திருமணமானபோது சீதனமாக மிளகு கொண்டு வருவது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் மசாலாப் பொருட்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்ததாலும், பொருட்கள் மிகவும் விலை உயர்ந்ததாலும், இறக்குமதியை அதிகரிப்பதற்காக பலர் இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடிக்க முயன்றனர். இதன் மூலம் இந்தியாவுக்கான கடல் வழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முயற்சிகளே பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்ய வழிவகுத்தது மற்றும் அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்து குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.

பண்டைய காலங்களில், மிளகு இலத்தீன் மொழியில் பைப்பர் என்று குறிப்பிடப்பட்டது. எகிப்தின் பண்டைய நாகரிகத்தின் எச்சங்களான பிரமிடுகளில் பாதுகாக்கப்பட்ட இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டது. கிமு 1213 இல், எகிப்தின் இரண்டாம் ராம்செஸ் மன்னரின் இறுதிச் சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டது, கண்டறியப்பட்டது. இருப்பினும், பண்டைய எகிப்திய நாகரிகத்தில் மிளகு பயன்பாடு எந்த அளவிற்கு இருந்தது மற்றும் இந்தியாவில் இருந்து எகிப்துக்கு மிளகு எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்பது தெரியவில்லை.

உலகிலேயே அதிக மிளகு நம் நாட்டிலேயே கேரளாவில் தான் விளைகிறது. கேரளாவில் இருந்து தான் அரபு நாடுகளுக்கு மிளகு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம்மிடம் இருந்து கிடைக்கும் மிளகை அரேபியர்கள் அதிக விலைக்கு ஐரோப்பியர்களுக்கு விற்று லாபம் பார்த்து வந்தனர். மிளகு ஐரோப்பியர்களுக்கு மிகவும் அவசியமான மற்றும் அத்தியாவசியமான பொருளாக இருந்தது.

ஏன்னென்றால், பனிப்பொழிவு காரணமாக, அவர்கள் பெரும்பாலும் இறைச்சி சாப்பிடுவார்கள். ஆனால் இறைச்சியின் சுவை அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இந்த மிளகை அந்த இறைச்சியுடன் சமைத்து ருசி பார்த்த பிறகுதான் இறைச்சியின் சுவை கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், இந்த மிளகு நீண்ட நாட்கள் இறைச்சியை கெட்டுப் போகாமல், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருளாகவும் இருந்தது. மிளகின் மகத்துவம் அறிந்து நம் பாரதத்தை நாடினார்கள். அதைக் கண்டுபிடித்த பிறகுதான் நம் நாட்டில் வியாபாரம் செய்ய ஆரம்பித்து, பிறகு நம் நாட்டைக் கைப்பற்றினார்கள்

மிளகின் சிறப்புகள்

மிளகு ஒரு கொடி வகையை சார்ந்தது . அதன் பழங்கள் காய்ந்த பிறகுதான், மணமுள்ள மிளகு கிடைக்கும். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். மிளகு “மசாலா பொருட்களின் மன்னன்”. இந்த மிளகு வணிகத்தில் மதிப்புமிக்க பொருளாக இருந்தது. எனவே இது “கருப்பு தங்கம்” என்று அழைக்கப்படுகிறது. நமது சங்க இலக்கியங்களில் இந்த மிளகு பற்றிய குறிப்புகள் அதிகம். இதை எண்ணி நம் முன்னோர்கள் “பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்” என்பார்கள். தமிழ்நாட்டின் கொல்லிமலையில் மிளகு விளைச்சல் அதிகமாகும்.

பதப்படுத்தும் முறை

கருமிளகு

பச்சையாக பழுக்காத மிளகு காய்களை கொடிகளில் இருந்து பறித்து, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து உலர்த்தவும். காய்களின் வெளிப்புறத் தோல் வெப்பத்தால் உரிக்கப்படுவதால், காய்கள் விரைவாக காய்ந்து, விதையுடன் கூடிய கூழ் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளால் கருப்பாகிவிடும். இயற்கையான சூரிய ஒளி மற்றும் பல்வேறு இயந்திரங்கள் மூலம் காய்களை இடத்திற்கேற்ப காயவைக்கிறார்கள். இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு சரியான பொட்டலங்களில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.

வெண்மிளகு

பெரும்பாலான நாடுகளில் கருப்பு மிளகு பயன்படுத்தப்பட்டாலும், சில பகுதிகளில் வெள்ளை மிளகு பயன்படுத்தப்படுகிறது. மேற்கண்ட முறையைப் போலன்றி, பழுத்த மிளகு பழங்கள் வெண்மிளகு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் சுமார் ஒரு வாரம் தண்ணீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் கூழ் அழுகிவிடும். பின்னர், பழத்தின் சதைப்பகுதி தேய்க்கப்பட்டு அகற்றப்பட்டு விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர்ந்த வெள்ளை விதைகள் மிளகுகளாக சந்தைப்படுத்தப்படுகின்றன. வேறு சில முறைகளும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சில பழுக்காத மிளகு காய்கள் வெண்மிளகு உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

பச்சை மிளகு

பச்சை மிளகு , கருப்பு மிளகு போல், பழுக்காத மிளகு காய்களை உலர்த்தி தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைப் பாதுகாக்க, சல்பர் டை ஆக்சைடுடன் கலக்குதல் மற்றும் உலர்த்துதல் போன்ற சில முறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகரில் ஊறவைத்த பச்சை மிளகு காய்களும் பச்சை நிறத்தில் இருக்கும். ஆசிய சமையல் பாணிகளில் ஒன்றான தாய் சமையலில் புதிதாக எடுக்கப்பட்ட பச்சை மிளகை அதிகம் பயன்படுத்துகின்றனர். உலர்ந்த அல்லது பாதுகாக்கப்படாத மிளகு காய்கள் விரைவில் கெட்டுவிடும்.

சிவப்பு மிளகு

வினிகரில் பாதுகாக்கப்படும் பழுத்த மிளகுத்தூள் இளஞ்சிவப்பு மிளகு மற்றும் சிவப்பு மிளகு என்று அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகு பழங்களை சில ரசாயனங்கள் சேர்த்து உலர்த்துவதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்

மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கரோட்டின், தியாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் ரியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன. சித்த மருத்துவத்தில் மிளகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜலதோஷம், காய்ச்சல், இருமல் மற்றும் நச்சுத்தன்மையை போக்க மிளகு பயன்படுகிறது. மிளகு வயிற்றில் உள்ள வாயுவை நீக்கி, உடலை சூடாக்கி, வீக்கத்தைக் கரைக்கும். உடலில் காய்ச்சலைக் குணப்படுத்தும் குணம் இதற்கு உண்டு. இது காரமாகவும் மணமாகவும் இருக்கும். உணவு செரிமானம். உணவில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க வல்லது.

History of pepper

Pepper (Piper nigrum) is a flowering vine belonging to the Piperaceae plant family. If there was one food item that was once more expensive than gold, it was pepper. This caused other countries to invade our Bharatnath. Knowing the greatness of chili, our ancestors used chili as a base to add flavor to food. This pepper is still a commodity that can be exported in large quantities from our country to other countries.

Pepper vine

Pepper vine is a perennial plant that can grow up to about four meters in height. It is a creeping vine and clings to nearby trees, poles, and ropes. Its vine grows up to 10-12 feet on a tree with thick bark. Mainly in mulberry, these vines grow densely intertwining the trees. Pepper leaves are as big as betel leaves. The leaves of this plant are five centimeters to ten centimeters long and three centimeters to six centimeters wide. Its nodes are green and slightly spreading. Its tiny flowers bloom on eight-centimeter-long needle-like stems. When the flowers develop into pods, the flower stalks are about 15 cm. Its pods are more than 20-30 per string. They take it raw and process it without changing its color. Ripe fruits are plucked and dried thoroughly in the sun which turns into black pepper. This is pepper.

Pepper varieties

There are several varieties based on pepper color. All have slight differences. Other Names of Pepper,

White pepper
Black pepper
Green pepper
Red pepper

Other names for pepper

Milakai is also known by Malayali people as Kurumilaku and Kolakam. In Tamil Nadu, it is called Pepper, in Kerala Kurumilaku, in Karnataka as Menasu, in Konkani as Miriyakonu, and in Andhra as Miriam or Mirialu.

Tail pepper

Tail pepper is a type of herb that grows on a vine. A type of pepper similar to chili but with a stem, hence the name tail pepper. It is used in cooking for its aroma. Also, it has medicinal properties. Due to its alkalinity, it stimulates appetite and increases body heat. It is used in Siddha medicine to cure various diseases.

History of pepper

By the end of the 16th century, it was cultivated to a lesser extent on the islands of Java, Sumatra, Madagascar, Indonesia, and many other East Asian countries. Europe’s pepper trade depended on India, as pepper grown in these areas was sold in China and domestically. It is no exaggeration to say that the mass production of pepper and other spices changed world history. The East India Company was started when Dutch merchants in London raised the price of pepper by five shillings. In European families, it was considered a sign of wealth for a woman to bring a modest amount of pepper when she got married. As the demand for spices in European countries was very high and the products were very expensive, many tried to find a sea route to India to increase imports. Through this, the sea route to India was discovered. It was these efforts that later led Europeans to conquer and rule India and lead the discovery and colonization of continents like the Americas.

In ancient times, pepper was referred to as Piper in Latin. Pepper was found in the nostrils of dead kings preserved in the pyramids, the remains of Egypt’s ancient civilization. In 1213 BC, pepper was found used in the funeral rites of King Ramses II of Egypt. However, the extent of pepper used in ancient Egyptian civilization and how pepper was transported from India to Egypt is unknown.

Kerala produces the most pepper in the world. Pepper is exported to Arab countries only from Kerala. The Arabs used to sell the pepper from us to the Europeans at a high price and make a profit. Pepper was a very necessary and essential commodity for Europeans. Because, because of snow, they mostly eat meat. But they don’t like the taste of meat. It was only after cooking and tasting this chili with that meat that I got the taste of the meat. Apart from that, this pepper kept the meat from spoiling for a long time and was also a healthy substance. Knowing the greatness of pepper, they sought our Bharat. After discovering it, they started doing business in our country, and then they conquered our country.

Features of Pepper

Pepper is a vine species. Only after its fruits are dried, fragrant pepper is obtained. Vines, leaves, and roots are helpful parts of the pepper. Pepper is the “king of spices”. This pepper was a valuable commodity in trade. Hence it is called “black gold”. There are many references to this pepper in our Sangha literature. Considering this, our forefathers used to say, “If you have ten pepper, you can eat it in your enemy’s house.” Kollimalai in Tamil Nadu has the highest yield of pepper.

Processing method

Black pepper

Pick the green unripe pepper pods from the vines, soak them in hot water for a while and dry them. As the outer skin of the pods is peeled off by the heat, the pods dry out quickly and the pulp with the seed dries out, shrinks, and becomes blackened by fungi. The pods are dried locally by natural sunlight and various machines. The pepper thus dried is packed in proper packages and sent to the markets.

White pepper

While black pepper is used in most countries, white pepper is used in some areas. Unlike the above method, ripe pepper fruits are used for pepper production. These fruits are soaked in water for about a week. By this, the pulp of the fruit rots. Then, the fruit’s pulp is rubbed and removed and the seeds are dried. The dried white seeds are marketed as peppers. Some other methods are also in use. Some of these unripe pepper pods are also used for chili production.

Green pepper

Green pepper, like black pepper, is prepared by drying unripe pepper pods. To preserve the green color of the pods, some methods are followed, such as mixing with sulfur dioxide and drying. Green pepper pods soaked in vinegar are also green in color. One of the Asian cooking styles, Thai cooking makes a lot of use of freshly picked green chilies. Dry or unpreserved pepper pods will spoil quickly.

Red pepper

Ripe peppers preserved in vinegar are called pink pepper and red pepper. Red pepper is also prepared by drying ripe pepper fruits with some chemicals.

medicinal properties

Pepper contains mineral salts like calcium, iron, phosphorus, and vitamins like carotene, thiamin, riboflavin, and ricin. Pepper is widely used in Siddha medicine. Pepper is used to relieving cold, fever, cough, and detoxification. Pepper removes flatulence, heats the body, and dissolves inflammation. It has the property of curing fever in the body. It is spicy and fragrant. Digestion of food. Detoxifies food.

admin

Recent Posts

“போல்ட் நட்” விழுங்கிய ஒருவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!…

Doctors save the life of a man who swallowed a "bold nut" கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…

1 month ago

சத்யஸ்ரீ கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்…

CBCID police collecting evidence in Satyasree murder case… சென்னை கிண்டி அருகே ஆதம்பாக்கம் பகுதியில் ரயில் முன்…

1 month ago

மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலம் !!

Million-year-old dinosaur skeleton up for auction in Paris பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று…

1 month ago

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

Booker prize for the novel written by Sri Lankan writer Shehan Karunathilaka! இலங்கை எழுத்தாளர் ஷெஹான்…

1 month ago

உலகில் அதிக விலை மதிப்புள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம் !..

The world's most expensive diamond was introduced in Dubai! உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில்…

1 month ago

ஒருதலைக் காதல்…! ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை !!….

https://youtu.be/JEg-2uxrrn4 A college student was killed after being pushed by a moving train சென்னை கிண்டியை…

2 months ago