அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு  – சிறகிழந்தநல்லூர்

கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயில்-சிதம்பரம் பிரதான சாலையில் ஒன்பதாவது கி.மீ.யில் தெற்கே செல்லும் சாலையில் சென்று,  பெரிய ஓடையைக் கடந்தால் சிறகிழந்த  நல்லூரை காணலாம்.  இங்கு கிழக்கு நோக்கிய அழகிய சிறிய கோயிலில் ஞானபுரீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை ஆகியோர் சந்நிதி உள்ளது. 1929 ஆம் ஆண்டு திருநாரையூர் திருப்பணியின் போது இக்கோயில் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சரித்திரம் நடந்த இடமான, வளர்ந்து வரும் சிறகிழந்த  நல்லூரைப் பற்றி பார்ப்போம்

சிறகிழந்தநல்லூர் என்கின்ற சிறகெழந்தநல்லூர்  இந்த ஊருக்கு பேப்பர்படி குழுமமான நாங்கள் ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு  வழிகேட்டு சென்ற போது ஒருவருக்கு கூட இந்த கோவில் இருப்பதற்க்கான அடையாளம் தெரியவில்லை. இருப்பினும், அந்த ஊர் மூத்தகுடிகளிடம் வழிகேட்டு சென்றோம். சென்ற உடனே நாங்கள் கண்ட காட்சி சிதைந்த நிலையில் காடுகள் சூழ்ந்த ஒரு  பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தை நோக்கி சென்றவுடன் உள்ளே எங்களை வரவேற்றது நந்தவனம். இந்த உலகில் எந்த கோவிலிலும் காணாத, வழக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் மாறான ஒரு அமைப்பு. இதை படித்தவுடனே உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம், அதை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். 

பொதுவாக, சிவன் கோவில்களில்(பரமேஸ்வரர் தேவா கோவில்களில்) கணபதி, மகாலட்சுமி, முருகன்( முருகனுடன் வள்ளியும் தெய்வானையும் கல்யாண கோலத்தில் இருப்பார்), ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக, முருகன் ஆண்டி கோலத்திலும், கல்யாணக்கோலத்திலும் தனி தனியாக இருப்பார். இங்கு இருந்த அர்ச்சகர் கூறுகையில், எந்த ஒரு கோவில்களிலும் முருகனின் தனி ஒருவர் சிலையை வழிபாட்டு இருந்தால் அங்கு நிச்சயம் சித்தர்கள் வழிபட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர். பொதுவாக, அனைத்து கோவில்களிலும் பெருமாள் (பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி) காட்சியளித்தனர். ஆனால் சற்று வித்தியாசமாக கிருட்டினர்வுடன் ருக்மணியும், சத்யபாமாவும் இருஞானபூரிஸ்வரர் ந்தனர். சற்று வித்தியாசமாக (தர்ம சாஸ்தா) என்று கூறக்கூடிய ஐயப்பன் சன்னதியும் இருந்தது.  பொதுவாக, கோவில்களில் நவகிரகனங்கள் இருப்பது வழக்கம். அனால் இங்கு சற்று வித்தியாசமாக நவகிரகங்கள் இல்லாமல் நவக்கிரகத்தில் குறிப்பாக சூரியன் (ஆதவன், ஞாயிறு, செங்கதிரோன்), சனிபகவான் (சனி தேவன்) காலபைரவர்(ஆதி பைரவர்). சூரியன், சனிபகவான், காலபைரவர் தனி தனி சிறப்பு வழிபாட்டு இடங்களாக இருந்தது. மேலும் ஒரு சிறப்பை கூறுகிறேன் கேளுங்க. அனைத்தையும் சுற்றி பார்த்து விட்டு அர்பூதத்தின் அதிசயமான ஞானபூரிஸ்வரை தரிசிக்க சென்றோம். அங்கு பார்த்தது ஓற்றுமையில் ஓன்று (என்னவென்றால் அங்கு சிவலிங்கத்தின் வளாகத்தில் உள்ள ஒரு தூணில் திருமாலின் திருநாம திலகம் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்திற்கு பிறகு இங்கு கண்டுள்ளேன். இங்கு இன்னொரு சிறப்பும் இருந்தது. இந்த கோவிலில் உண்டியலே கிடையாது. இங்கு சுற்றி பார்த்ததில் எங்குமே கல்வெட்டுகள் இல்லை. ஆனால் ஒரே ஒரு கல்வெட்டுகள் இருந்தன, அதுவும் மிகவும் மோசமான சிதைந்த நிலையில் உள்ளது. இங்கு உள்ள சிவன்( ஞானபூரிஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை) இருவரின் கருவறை மட்டுமே பராமரிப்பில் இருந்தது. ஆனால் சுற்று சுவர்கள் கலச கூரைகளும் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டன. இதை சரி செய்ய போதுமான நிதி இல்லை என்பதால் அங்குள்ள மக்களிடம் ஊர் வரி விதிக்காமல் பொருளாக(சுண்ணாம்பு, சிமெண்ட் மூட்டைகளாகவும், செங்கற்களாகவும், கடுக்காய், கற்றாழை மற்றும் வெல்லம்) இது போன்ற பொருட்களை பெற்றும் மற்றும் அங்குள்ள முக்கியஸ்தர்களின் முயற்சியாலும் பழைய கோவில்களின் கட்டுமானத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கோவில் சீரமைத்து மேலும் அழகை கூட்டிக்கொண்டு இருந்தனர். 

சிறகிழந்தநல்லூர் கோவில் வரலாறு 

துர்வாச முனிவர் கடும் தவத்தில் இருந்தபோது, சில கந்தர்வர்கள் தங்க விமானத்தில் ஆகாய மார்கமாக சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களைச் சாப்பிட்டு விட்டு, கொட்டைகளை கீழே போட. அது துர்வாச முனிவரின் மீது விழுந்து அவரின் தவம் கலைந்தது.

மிகுந்த கோபத்தில் கந்தர்வனை, பறவையைப் போல் விழுந்த பழக்கொட்டைகளை  நாரையாக மாறும்படி சபித்தார். முக்தி வேண்டிய நாரையிடம் சிவபெருமானுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்று கூறினார்.

அதையே செய்து கொண்டிருந்த நாரைக்கு ஒரு நாள் சோதனை வந்தது. காசியில் இருந்து கங்கை தண்ணீர் கொண்டு வந்தபோது, பலத்த புயலும் மழையும் பெய்ததால், பறக்க முடியாமல் காற்றின் வேகத்தில் நாரையின் இறக்கைகள் பிய்ந்து கீழே விழுந்தது. 

இவ்வாறு நாரையின் சிறகுகள் விழுந்த இடம் ‘சிறகிழந்த நல்லூர்’ என அழைக்கப்படுகிறது. அவ்வூர் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வாறு கஷ்டப்பட்டாலும் நாரை தவழ்ந்து வணங்கி மோட்சம் பெற்றது. அதனால் நாரை ஊர் “திருநாரையூர்” என்று வழங்கப்பட்டது.

History of Arulmiku Gnanapureeswarar Temple – Chirakizanthanallur

In Cuddalore district, at the ninth km of the Kattumannarkoil-Chidambaram main road, take the road going south and cross the Periya Odai to find the Chirakizanthanallur. Here, a beautiful small temple facing east houses the shrine of Jnanapureeswarar and Gnanambikai. During the Tirunaraiyur Tirupani in 1929, the temple was redone by Nattukottai Chettiars. It is currently under the control of the Hindu Religious Endowment Department. Let’s take a look at the budding Nallur, the place where this history took place. 

When we, the paperpadi group, went to the Gnanapureeswarar temple in this town called Chirakizanthanallur, not even one person knew the sign of this temple. However, we asked the elders of the village for directions. As soon as we left, the scene we saw was a huge forest surrounded by ruins. As soon as we reached the grandeur, Nandavana welcomed us inside. An unconventional and unconventional system of worship not seen in any temple in the world. You may be confused as soon as you read this, let me tell you about it.

Usually in Shiva temples (Parameswarar Deva temples) Ganapati, Mahalakshmi, Murugan (along with Valli and Deivana are present in Kalyana kolam), but here, unusually, Murugan is alone in Andi kolam and Kalyana kolam. According to the priest who was here, if there is a single idol of Murugan being worshiped in any temple, Siddhas must be worshiping there. Generally, Perumal (Perumal along with Sridevi, Bhudevi) is seen in all the temples. But in a slightly different way, Rukmini and Satyapama were two Jnanapurisvaras along with Kritinar. There was also an Ayyappan shrine which can be said to be slightly different (Dharma Shasta). Generally, Navagrahanas are used in temples. But here it is a little different without navagraha in navagraha especially Surya (Adhavan, Ngayiru, Sengathiron), Sanibhagavan (Sani Devan) Kalabhairava (Adi Bhairava). Sun, Saturn and Kalabhairava were special places of worship. Let me tell you one more thing. After looking around, we went to visit the wonder of Arbutam, Jnanapuriswar. What I saw there was one of the similarities (that is, Tirumal’s Thirunama Thilakam is engraved in stones on a pillar in the Shiva Lingam’s premises. I saw this here after the Chidambaram Thillai Nataraja Temple. There was another special thing here.  I looked around here and there were no inscriptions anywhere. But there was only one inscription, It is also in a very disintegrated state. Only sanctum sanctorum of Lord Shiva (Gnanapureeswarar and Gnanambikai) was maintained here. But the circular walls and roofs were found in a disintegrated condition. As there was not enough funds to repair this, the local people were given material (lime, cement bags and bricks) without levying town tax. , (kadukai (Myrobalan), aloe and Jaggery) by getting such materials and by the efforts of the dignitaries there, they renovated the temple using the technology of old temple construction and added more beauty.

History of Chirakizantanallur Temple

When Sage  Durvasa was in severe penance, some Gandharvas took to the sky in a golden plane. Among them, Devadattan, a Gandharva, eats the fruits and drops the nuts. It fell on Sage Durvasa and his penance was dissolved.

In great anger, Gandharva cursed the bird-like pods to turn into storks. He told the stork who wanted salvation that he would get salvation if he anointed Lord Shiva with Ganga water and worshiped him.

The stork, who was doing the same, got a test one day. When the Ganges brought water from Kashi, due to heavy storm and rain, the stork’s wings were crushed by the speed of the wind and fell down.

Thus the place where the stork’s wings fell is known as ‘ChirakizhanthaNallur’. Avvur is one km away from Tirunaraiyur. Despite suffering like this, he bowed down to the stork and got moksha. Hence Narai town was given as “Thirunaraiyur”.

Leave a Reply

Your email address will not be published.