High speed train faster than plane

China has introduced the world’s fastest train traveling at 600 kilometers per hour faster than an airplane. In China, the Railway Rolling Star Corporation is in the process of building the world’s fastest train. Accordingly, McLean has developed a train that can run in the electromagnetic direction. The train uses two pairs of magnets, one to lift the train over the rails and the other to move the magnet forward in the direction of the electromagnetic field. China has been using the technology for short distances for about 20 years, operating McLean trains at speeds of up to 400 km / h. In this situation, China has broken the record set by another train that can travel at a speed of 600 kilometers per hour. The Chinese-made train was unveiled in Qingdao yesterday. The train is expected to cover 1,300 km between Shanghai and Beijing in 2.5 hours. Traveling by air between the same two cities takes about 3 hours. Similarly, the current bullet train travels 5.5 hours.

விமானத்தை விட வேகமாக செல்லும் அதிவேக ரயில்

சீனாவில்  விமானத்தை விட வேகமாக மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்  உலகின் அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில்,  ரயில்வே ரோலிங் ஸ்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகில் அதிவேக ரயிலை உருவாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி,  மின்காந்த திசையில் இயங்கக்கூடிய மேக்லேவ் ரயிலை உருவாக்கி உள்ளது. இந்த ரயில் இரண்டு ஜோடி காந்தங்களைப் பயன்படுத்துகிறது, ஒன்று ரயில்பெட்டியை தண்டவாளத்திற்கு மேல்  உயர்த்தும் , மற்றொன்று காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும்  மின்காந்த திசையில் முன்னோக்கி இயக்கவும் உதவிக்கிறது . சுமார் 20 ஆண்டுகளாக சீனா இந்த தொழில்நுட்பத்தை குறைந்த தூரத்தில் பயன்படுத்தி வருகின்றது அதன்படி  400 கிமீ / மணி வேகத்தில் மேக்லேவ் ரயில்களை இயக்கி வந்துள்ளது. இந்த நிலையில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலை தயாரித்து, சீனா தந்த சாதனையை தானே முறியடித்துள்ளது.  குயிங்டாவ் நகரில் சீனாவால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட அந்த ரயில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் ஷாங்காய் பெய்ஜிங் இடையேயான 1,300 கிலோ மீட்டரை 2.5 மணி நேரத்தில் கடக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே இரண்டு நகரங்களுக்கு இடையே விமானத்தின் மூலம் பயணித்தால் 3 மணி நேரமாக உள்ளது .அதேபோல தற்போது உள்ள புல்லட் ரயில் பயணித்தால் 5.5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.