அவ்வைக்கே அள்ளித்தந்த அதியமானின் அறியப்பழம் !

பெரும்பாலாக நெல்லிக்காயை விரும்பி உண்பவர்கள் மிகவும் குறைவு.      ஏனென்றால் அதனுடைய துவர்ப்பு தன்மை நம்மில் பலரை விரும்பசெய்யயாது. “அவ்வைக்கு நெல்லிக்கனியை கொடுத்த அதியமான்”…. இத்தகைய சிறப்பிற்கு ஏற்றவாறு நெல்லிக்கனியில் பல்வேறு மருத்துவகுணங்கள் அடங்கி இருக்கிறது. ஆயுளையை அதிகரிக்கும் இத்தகைய நெல்லிக்காயின் பயன்களை பற்றி அறியவேண்டுமாயின் மேலும் படியுங்கள்…….   

*நெல்லிக்காயில் நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி (Vitamin C), இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றது. 

*ஆரஞ்சு பழத்தை  விட இருபது மடங்கு வைட்டமின் சி சத்து நெல்லிக்காயில் அதிகம் உள்ளது. ஆப்பிளை விட மூன்று மடங்கு புரதச்சத்து இருக்கிறது.

*நெல்லிக்காயில் உள்ள குரோமியம் சத்துக்கள் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் வராமல் தடுக்கின்றது. மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.மாரடைப்பு வருவதை தடுக்கிறது.

* உடல் பருமனால் நாட்டில் பலர் வேதனை அடைந்து வருகின்றனர்  நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. உடலில் உள்ள புரதச்சத்தை அதிகரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது. 

* இக்கனி இரத்தத்தில் உள்ள நச்சு தன்மையை நீக்கி இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.

*நெல்லிக்காயை தினமும் உண்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். 

* முதுமையை தள்ளிப்போடும் வல்லமை இந்த நெல்லிக்கனிக்கு மட்டுமே உள்ளது.

   இத்தகைய மகத்துவம் வாய்ந்த நெல்லிக்கனியை பற்றி அறிந்து அனைவரும் பயன்பெறுவோம்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.