இன்றைய சூழலில் கொய்யாப்பழத்தை பெரும்பாலானோர் மறந்து வாழ்கின்றனர். ஆரஞ்சு ஆப்பிள் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவமானது கொய்யாப்பழத்திற்கு குறைந்து வருகின்றது. நம் ஊர்களில் கொய்யாக்கனி மிகவும் சுலபமாக கிடைக்கும். கொய்யாவின் சிறப்பை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்……
கொய்யாப்பழத்தில் இரண்டு வகை உள்ளது அவை வெள்ளை மற்றும் சிவப்பு. அதிலும் சிவப்பாக உள்ள கொய்யாப்பழம் சுவையில் மட்டும் அல்ல அதன் பயன்களும் தனித்துவம் பெற்றது. நம் மனம் கவரும் இந்த கொய்யாப்பழத்திற்கு கரோட்டீனாய்டு என்னும் நிறமியே காரணமாகும். இதில் நீர்ச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* மனித உடலில் உள்ள உறுப்புகளில் முக்கிய பங்கை அளிப்பது கண் ஆகும். காட்சிகளை பார்க்கும் திறனை அளிக்க வல்லவை கண்களே.. சிவப்பு கொய்யாவில் உள்ள வைட்டமின் எ சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வையில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.
* ஆப்பிள், ஆரஞ்சு போன்றவைகளோடு ஒப்பிடும் பொது கொய்யப்பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
* தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும், மலசிக்கல் இருக்காது.
* கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
* கர்ப்பிணிகளுக்கு தேவையான வைட்டமின் பி 9 இதில் உள்ளதால் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
* கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி 3, வைட்டமின் பி6 உள்ளதால் மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் தலைவலி டென்ஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
*கொய்யாப்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்தினால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது மேலும் வயிற்று புண்ணை ஆற்றும்.
எனவே சுலபமாக கிடைப்பதால் தான் அதனுடைய சிறப்பை மறந்துவிடுகிறோம்….இத்தகைய பயன்களை தரும் கொய்யாவின் அருமை தெரியாமல் மதிப்பை ஏற்றிவிடாதீர்கள்.
Leave a Reply