Aldrin won gold in the swimming competition

 Read this post to know more about the Tamil who won gold in the Goa swimming competition

Gold winning Tamilan  

    Aldrin Armstrong hails from Eravancheri village near Tharangambadi in Mayiladuthurai district. He is working as a physical education teacher in a private school in Erode.

He has been interested in swimming and javelin throwing since he was a child. He trained in swimming in a public pool in the village and competed in various competitions. Aldrin Armstrong wins gold.

When Aldrin Armstrong arrived at his hometown Mayiladuthurai Junction, he was greeted enthusiastically by relatives of the villagers led by lawyer Sangamitran. In order Gold medalist handicap Thangavelu Mariappan, who won gold at the Paralympic high jump. Aldrin Armstrong, a physical education teacher, currently wins gold in swimming competition.

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற ஆல்ட்ரின்

  கோவா நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தமிழனை பற்றி தெரிந்து கொள்ள இப்பதிவை மேலும் படியுங்கள் 

தங்கம் வென்ற தமிழன் 

      மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே எரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆல்ட்ரன் ஆம்ஸ்ட்ராங். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சிறுவயதிலிருந்து நீச்சல் போட்டி ஈட்டி எறிதல் போன்ற பல போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கிராமத்தில் உள்ள பொது குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் கோவாவில் நடந்த அகில இந்திய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு 100 மீட்டர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் இதையடுத்து தற்போது நேபாளில் நடந்த நீச்சல் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு ஆல்ட்ரன் ஆம்ஸ்ட்ராங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் 

சொந்த ஊரான மயிலாடுதுறை ஜங்ஷன் க்கு ஆல்ட்ரன் ஆம்ஸ்ட்ராங் வந்தபோது வக்கீல் சங்கமித்ரன் தலைமையில் கிராம மக்கள் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளியான  தங்கவேலு மாரியப்பன் வரிசையில் தற்போது உடற்கல்வி ஆசிரியர் ஆல்ட்ரன் ஆம்ஸ்ட்ராங் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.