Thirteen people from Kerala have been affected by the Giga virus

According to the state health department, 13 people in Kerala have been infected with the Giga virus, which has shaken countries including the United States. Thirteen people from Thiruvananthapuram have been infected with the Giga virus and their sputum and blood samples have been sent to a virus laboratory in Pune, officials said. In 2017, four people in the northern states of India were diagnosed with the Giga virus. Since then, the Giga virus has only been detected in Kerala.

 Doctors say the virus is spread by mosquitoes. Doctors say it is not a deadly infection and can be controlled with adequate rest. They say the Giga virus is spread by mosquitoes that bite during the day. However, Kerala doctors have advised pregnant women to be cautious. Giga virus is the fastest spreading virus in Mexico, the Caribbean Islands, Central and South America.

ஜிகா வைரஸால் கேரளாவை சேர்ந்த 13 பேர் பாதிப்பு

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நடுங்கவைத்த ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் 13 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த 13 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களது சளி மற்றும் இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் வட மாநிலங்களில் நான்கு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பின்னர் இப்போது தான் கேரளாவில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது மரணத்தை விளைவிக்கக்கூடிய தொற்று அல்ல, போதிய ஓய்வு எடுத்தால் இதனை கட்டுப்படுத்திவிடலாம் என்றும்  மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஜிகா வைரஸ் பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்கள் மூலம் பரவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கர்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கேரளா மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மெக்ஸிகோவில் அதிகம் பரவிய ஜிகா வைரஸ் கரேபியன் தீவுகள், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் வேகமாக பரவிய வைரஸ் ஆகும்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.