Home மஹத் சத்யாகிரஹம் என்றால் என்ன ?

மஹத் சத்யாகிரஹம் என்றால் என்ன ?

1927 மார்ச் 20 அன்று டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றதாகும். தலித் என்னும் தீண்டத்தகாத மக்கள் மகத் என்னும் நகரில் அமைந்துள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்டப் போராட்டமாகும்.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற மஹத் சத்யாகிரஹம்

 பிராமணர், க்ஷத்திரிய, வைஷ்ய மற்றும் சுத்ரா என நான்கு வர்ணங்களாகப் இந்து சாஸ்திரங்கள் இந்து சமுதாயத்தை பிரிக்கின்றன. இந்திய சாதிய அமைப்பில் தீண்டத்தகாதோர் இந்துக்களின் சாதிக்கட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்துக்கள்  பயன்படுத்தும் குடிநீர் குளங்கள், கிணறுகள் மற்றும் சாலைநிறுவப்பட்டுகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தலித்துகள் கோயில்களுக்குள் நுழைய முடியவில்லை, தங்களளுக்கு தனி நீர்நிலைகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் தனித்தனியாக உட்கார வேண்டியிருந்தது.

பம்பாய் சட்டமன்றம், தலித் மக்கள் அனைவரும், அரசால் நிறுவப்பட்டு இயங்கிவரும் அனைத்து இடங்களையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கி சட்டம் இயற்றியது. அதேபோல் 1924 ஆம் ஆண்டு மகத் நகராட்சியும் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் சாதி இந்துக்களின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் சாதி இந்துக்களின் இந்த பிற்போக்குத்தனமான பழக்கவழக்கங்களை சவால் செய்ய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அவரது சக ஊழியர்களும் “தீண்டத்தகாதவர்கள்” பிரதான வீதிகள் வழியாக சவ்தார் தொட்டியை நோக்கி ஊர்வலம் நடத்தினர். டாக்டர் அம்பேத்கர் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்தார். மற்றவர்களும் இதைப் பின்பற்றினர். பின்பு அம்பேத்கரும் தீண்டத்தகாதோரும் நகரின் முக்கிய இந்துக் கோவிலுக்குள் நுழையப் போகிறார்கள் என்ற வதந்தி பரவிய  நிலையில் சாதி இந்துக்கள் திரண்டு வந்து தீண்டத்தகாதோர் குளத்தை தீட்டுப்படுத்திவிட்டதாக கூறி வாதிட்டுப் பரிகார பூசை செய்தனர்.

இச்செயலை மிகவும் வெறுத்த அம்பேதக்கர் மனுசு மிருதி என்னும் இந்துக்களின் புனித சட்ட நூலை தீயிட்டு எரித்து தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டு பம்பாய் உயர்நீதிமன்றம் மகத் குளத்தை தீண்டத்தகாதோர்ப் பயன்படுத்த உரிமை வழங்கி ஆணையிட்டது.

தலித் மக்களுக்காக நடத்திய அடித்தள போராட்டமாகும். இந்நாள் இந்தியாவில் சமூக வலுவூட்டல் நாளாக அனுசரிக்கப்பட்டது.  டாக்டர் அம்பேத்கர் கூறிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் அவரின் இலட்சிய சமுதாயத்தை நிலைநாட்டுவதற்கான காரணத்திற்காக செயல்படுங்கள்.

What is Mahad Satyagraha?

Mahad Satyagraha

 On March 20, 1927, Dr. P. R. It was held under the leadership of Ambedkar. Dalit untouchables protest against the denial of water in a public pool in the city of Magad.

Hindu scriptures divide Hindu society into four races namely Brahmin, Kshatriya, Vaishya, and Sutra. Untouchables in the Indian caste system is excluded from the caste structure of Hindus. They were denied permission to use drinking water pools, wells, and road installations used by Hindus. And the Dalits could not enter the temples, they were forced to have separate water bodies and their children had to sit separately in schools.

The Bombay Legislative Assembly passed a law allowing all the Dalit people to use all the places established and run by the government. Similarly, in 1924, the Magadh Municipality passed a similar resolution. But in the face of the failure of this resolution by the opposition of the caste Hindus, Dr. P.R. Ambedkar led his colleagues and the “untouchables” marching through the main streets towards the Sawdar tank. Dr. Ambedkar took water from the tank and drank it. Others followed suit. Later, as rumors spread that Ambedkar and the untouchables were about to enter the city’s main Hindu temple, caste Hindus gathered and argued that the untouchables had polluted the pool.

Ambedkar hated this act and expressed his opposition to the burning of the Hindu holy book Manusu Mridhi. In 1937, the Bombay High Court granted the right to use the Magadh pond untouchable.

It is a grassroots struggle for the Dalit people. This day was observed as Social Empowerment Day in India. Act for the cause of upholding his ideal society on the basis of freedom, equality, and fraternity as stated by Dr. Ambedkar.