An online seminar on the impact of the federal budget on rural development was held yesterday. Prime Minister Modi addressed the gathering.
Then he said,
Our promises for the 75th year of independence can only be fulfilled by the efforts of all. That effort can only be undertaken by all when each individual, sect and region receives the full benefits of development.
The budget provides a clear map of how to complete the benefits of the state’s development plans and how to achieve the goal of reaching 100 percent of the population with basic amenities.
Essential allocations have been made in the budget for each project such as Prime Minister Awas Yojana, Grameen Sadak Yojana, Jal Jeevan Mission, Northeast Communications and Broadband Internet facility in villages.
The vibrant village plan announced in the budget is important for the border villages. We will go to the border villages and spend a night there and enjoy its surroundings. Want to know about the lives of the people there. This will cause a pulse to those areas.
With more than 40 lakh property cards issued, the Swamitva scheme helps to systematically define residential and land in villages.
Various projects need to focus on new technology, to reach 100 percent. Thus the projects will be completed quickly and the quality will not be affected.
The target is to set up 4 crore piped drinking water connections under the Jaljivan project. Efforts to that end need to be improved. Every state government should be very vigilant about the quality of the pipes and the quality of the water to be supplied.
Water management needs to be strengthened. With all this in mind, he said that by 2024 every household will have access to tap water.
ஊரக வளர்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் தாக்கம் குறித்த ஆன்லைன் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
சுதந்திரத்தின் 75வது ஆண்டிற்கான நமது வாக்குறுதிகளை அனைவரின் முயற்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு தனிமனிதனும், பிரிவினரும், பிராந்தியமும் வளர்ச்சியின் முழுப் பலன்களைப் பெறும்போதுதான் அந்த முயற்சியை அனைவராலும் மேற்கொள்ள முடியும்.
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை நிறைவு செய்யவும், அடிப்படை வசதிகள் 100 விழுக்காடு மக்களைச் சென்றடைவதற்கான இலக்கை எட்டுவதற்கும் தெளிவான வரைபடத்தை பட்ஜெட் வழங்குகிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, கிராமீன் சதக் யோஜனா, ஜல்ஜீவன் மிஷன், வடகிழக்கு தகவல் தொடர்பு மற்றும் கிராமங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி என ஒவ்வொரு திட்டத்திற்கும் பட்ஜெட்டில் அத்தியாவசியமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட துடிப்பான கிராமத் திட்டம் எல்லையோர கிராமங்களுக்கு முக்கியமானது. நாம் எல்லையோர கிராமங்களுக்குச் சென்று அங்கே ஒரு இரவைக் கழித்துவிட்டு அதன் சுற்றுப்புறங்களை ரசிப்போம். அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது அந்த பகுதிகளுக்கு ஒரு துடிப்பை ஏற்படுத்தும்.
40 லட்சத்திற்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில், கிராமங்களில் குடியிருப்பு மற்றும் நிலத்தை முறையாக வரையறுக்க ஸ்வாமித்வா திட்டம் உதவுகிறது.
பல்வேறு திட்டங்கள் 100 சதவீதத்தை எட்ட, புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு தரம் பாதிக்கப்படாது.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடி குழாய் குடிநீர் இணைப்புகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் குழாய்களின் தரம் மற்றும் வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் தரம் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நீர் மேலாண்மையை பலப்படுத்த வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 2024க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கும் என்று கூறினார்.
நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…
சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…
உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…
தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…