
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரை சேர்ந்த சாம்சுதின், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர், கடந்த 18-ஆம் தேதி வேலை செய்து கொண்டிருக்கும் போது வாயில் வைத்திருந்த “போல்ட் நட்டை” எதிர்பாராதவிதமாக விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது இவரது இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில், “போல்ட் நட்” சிக்கி இருந்தது. இதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, வெற்றிகரமாக அகற்றினர்.
Leave a Reply