இலங்கைக்கு பிறகு தமிழர்கள் அதிகம் வாழும் அதிசியத் தீவு எது தெரியுமா ???

இந்திய மக்கள்  கல்வி, வேலைவாய்ப்பு, தனிப்பட்ட தேவைகள் போன்றவற்றுக்காக இந்தியாவை விட்டு வெளியேறி உலகெங்கிலும் பரவிக்கிடக்கின்றனர். அவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் என்றே கூறலாம். பலரும் கேள்விப்படாத இடத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவது உங்களுக்கு தெரியுமா..? அதிலும் அது ஒரு தீவு என்பது  சுவாரஸ்யமூட்டும் மற்றொரு செய்தி ஆகும்.

ஆஃப்ரிக்க கண்டத்திற்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கருக்கு அருகில் உள்ள தீவின் பெயர் தான் ’ரீயூனியன்’. இத்தீவு சுமார் 65 கி.மீ நீளமும், 45 கி.மீ அகலத்தை கொண்டுள்ளது இதில் சுமார் 8.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மொத்தமாக 2.500 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த தீவில் 2.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். அதாவது தீவில் மொத்த மக்கள் பரப்பளவில் இது மூன்றில் ஒரு பங்காகும். இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடிபெயர்ந்த தமிழர்களில், சாதிய பாகுபாடு காட்டாமல் மகிழ்ச்சியுடனும், அரவணைப்புடன் வாழ்வதில் ரீயூனியன் மக்களே முதன்மை பெறுகின்றனர்.

இந்த தீவு ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து மிக தொலைவில் இருந்தாலும் அந்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 1927ம் ஆண்டு இன்றைய புதுச்சேரி பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள், ரீயூனியன் தீவிலுள்ள கரும்புத் தோட்டங்களில் பணியாற்ற அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதுச்சேரி மற்றும் ரீயூனியன் தீவுகள் இரண்டும்  பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்னைகள் ஏற்படவில்லை. இந்தியா மட்டுமில்லாமல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் பகுதியில் இருந்தும் மக்கள் இங்கே குடியேறினார்கள். இந்த மக்களின் சந்ததியினரே தற்போது இம்மண்ணின் மைந்தர்களாக உள்ளனர்.

இங்கு வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழர்களும் பிரெஞ்சு மக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை ஃபிரெஞ்சு தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர். என்னதான் ஆஃப்ரிக்கா மற்றும் ஃபிரெஞ்சு கலாச்சாரங்களுடன் கலந்துவிட்டாலும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை விடாமல் தொடர்ந்து தைப்பூசம், பொங்கல், ஆடி 18 போன்ற தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளை இவர்கள் விடாமல் கொண்டாடி வருகின்றனர்.

Do you know which is the most amazing island inhabited by Tamils ​​after Sri Lanka ???

Indian people are leaving India for education, employment, personal needs etc. and spreading all over the world. It can be said that the number of Tamils ​​among them is a bit high.

 Did you know that most of the Tamils ​​live in a place where many have not heard ..? Even more interesting is the fact that it is an island.

Reunion is the name of an island near Madagascar in the Indian Ocean east of the African continent. The island is about 65 km long and 45 km wide with a population of about 8.5 lakh.

With a total area of ​​2,500 sq km, the island is home to 2.5 lakh Tamils. That is about one-third of the total population of the island. Among the Tamils ​​who have left India and migrated to other countries, the people of Reunion are the foremost in living happily and warmly without any caste discrimination.

Although the island is very far from France, it is under the control of that country. In 1927, when present-day Pondicherry was under French colonial rule, Tamils ​​from Karaikal, Pudukottai, Thanjavur and Nagai were taken to work in the sugarcane plantations on Reunion Island.

Both Pondicherry and the Reunion Islands were under French rule, so there were no problems with visas or passports. People not only from India but also from Jaffna in Sri Lanka settled here. The descendants of these people are now the scions of this land.

People from all walks of life living here are French citizens. Tamils ​​are also accepted as French. They proudly claim to be French Tamils. Despite mixing with African and French cultures, they continue to celebrate traditional Tamil festivals such as Thaipusam, Pongal and Audi 18 without letting go of their cultural identities.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.