Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year which plunged the entire screen world into tragedy.

Having transformed himself into a disciple of Abdul Kalam, the millions of saplings he planted are still giving us today the breath of wisdom as oxygen.

Fans, the public and the film industry alike are mourning the first anniversary of the iconic artist Vivek, who has always made people laugh through his film.

Born on November 19, 1961 in Sankarankoil, Tenkasi, Vivekananda has been known to shorten his name to Vivek in cinema. Introduced in Vivek Cinema by director K. Balachander. He made his cinematic debut in 1987 with Balachander’s Mindfulness.

Rather than making people laugh by entertaining others in the cinema, the prudent people who turned social commentary into comedy through comedy and brought social ideas to the masses were nicknamed the Little Artist. His concept comedies were hugely acclaimed in many films including Sami, Palayathamman.

Vivek played the hero in the 1991 film Senthura Devi directed by Ramanarayanan. Since then, he has acted as a hero in many films like Fingering Swelling, Shakalaka Baby, Viswanathan Ramamurthy, I Am Bala, Palakkad Madhavan, Ezhumin and White Flowers. Of these, Vivek’s investigation into the film White Flowers attracted everyone.

He lived by the principles of ABJ Abdul Kalam and the principles of Vivekananda by his name. Actor Vivek, who has planted millions of saplings across Tamil Nadu, is hailed by fans as the “Green Man” on his first anniversary.

Actor Vivek died suddenly of a heart attack on April 17 last year, shocking the entire screen world. The Palace 3 movie he starred in was released after Vivek’s demise. Vivek is also expected to feature scenes in The Legend. Movie celebrities and fans are paying homage to the iconic artist on the eve of actor Vivek’s first anniversary.

நகைச்சுவை நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !!

கடந்த ஆண்டு இதே நாளில் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்த நகைக்சுவை நடிகர் விவேக் மறைந்த நாள் இன்று. 

அப்துல் கலாமின் சீடராக தன்னை மாற்றி கொண்டு, அவர் நட்டு வைத்த பல லட்ச மரக் கன்றுகள்,  இன்று நமக்கு விவேக்கின் மூச்சு காற்றை ஆக்ஸிஜனாக எப்போதும் வழங்கி கொண்டே இருக்கிறது.

மறந்தாலும் மக்களை எப்போதும் தனது திரைப்படத்தின் வாயிலாக சிரிக்க வைத்து வரும் சின்ன கலைவாணர் விவேக்கின் முதலாமாண்டு நினைவஞ்சலியை ரசிகர்கள், பொதுமக்கள், மற்றும் திரையுலகத்தினர் நினைத்து வருந்தி வருகின்றனர். 

தென்காசி, சங்கரன்கோவில் 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி  பிறந்த விவேகானந்தன், சினிமாவில் தனது பெயரை விவேக் என சுருக்கிக்  கொண்டு மக்களை மகிழ்வித்து வந்தார். விவேக்கை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாலசந்தர். 1987ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

சினிமாவில் அடுத்தவர்களை கலாய்த்து மக்களை சிரிக்க வைப்பதை விட, சமூக பிரச்சனைகளை நையாண்டி செய்து சமூக கருத்துக்களை காமெடி மூலமாக மக்களுக்கு கொண்டு சென்ற  கருத்து கந்தசாமியாக மாறிய விவேக்கை மக்கள் எல்லாரும் சின்ன கலைவாணர் என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். சாமி, பாளையத்தம்மன் உள்ளிட்ட பல படங்களில் அவரது கருத்துள்ள காமெடிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விவேக், 1991ம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான செந்தூர தேவி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் . அதனையடுத்து, விரலுக்கேத்த வீக்கம், ஷக்கலக்க பேபி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, நான் தான் பாலா, பாலக்காட்டு மாதவன், எழுமின் மற்றும் வெள்ளைப்பூக்கள் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தில் விவேக் செய்யும் புலன் விசாரணை அனைவரையும் ஈர்த்தது. 

ஏபிஜே அப்துல் கலாமின் கொள்கைகளையும் தனது பெயர் கொண்ட விவேகானந்தரின் கொள்கைகளையும் கடைபிடித்து வாழ்ந்தவர். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்த நடிகர் விவேக், தனது முதலாம் ஆண்டு நினைவு நாளில் “பசுமை நாயகன்” என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவேக் மறைவுக்கு பிறகு அவர் நடித்த அரண்மனை  3 படம் வெளியானது. தி லெஜண்ட் படத்திலும் விவேக் காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சின்னத்திரை கலைஞருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.