விண்வெளி நிலையப் பணிகளுக்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது சீனா

கடந்த ஆறு மாதங்களில் நிலாவிலிருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்தது, செவ்வாய் கோளில் 6 சக்கர ரோபோட்டை நிறுத்தியது என கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டியுள்ளது சீனா. விண்வெளி தொடர்பான சீனாவின் அடுத்தடுத்த பணிகளில் மற்றொரு முயற்சி தான் இந்த வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய திட்டம்.

ஷென்சூ12 என்ற விண்கலம் ஜூன் 16, வியாழக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி 9.22 மணிக்கு, கோபி பாலைவனத்திலுள்ள ஜியூகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து மார்க் 2 எஃப் ராக்கெட் மூலம் சீனாவால் ஏவப்பட்டது.

அதில் 56 வயதான மூத்த விண்வெளி வீரர் நி ஹாய்ஷெங், நி தலைமையிலான அணியில் இருக்கும் லு பூமிங் (54 வயது), டாங் ஹாங்போ (45 வயது) ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380 கிலோமீட்டர் தூரத்தில் டியான்ஹே என்ற விண்கலத்தில் தங்குகின்றனர். சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

22.5 டன் எடை கொண்ட டியான்ஹே விண்கலனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தான் கமாண்டர் நி ஹாய்ஷெங் மற்றும் அவரது அணியினரின் பிரதான வேலை ஆகும். இந்த டியான்ஹே விண்கலம் தான் சீனா அமைக்க இருக்கும் 70 டன் எடை கொண்ட விண்வெளி மையத்தின் முதல் முக்கிய அங்கமாகும். சீனா திட்டமிட்டிருக்கும் விண்வெளி மையத்தில், விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான இடம், அறிவியல் ஆய்வகங்கள், பேரண்டத்தைக் காண தொலைநோக்கி போன்றவைகள் எல்லாம் இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

China sends 3 astronauts to space station missions

Over the past six months, China has performed a series of difficult tasks, bringing a sample of rock and soil from the moon to Earth and stopping a 6-wheeled robot on Mars. The project, which sent the soldiers into space, is another attempt at China’s next space mission.

The Shenzhou 12 spacecraft was launched by China on Thursday, June 16, at 9.22am local time, using a Mark 2F rocket from the Jiuquan satellite launch site in the Kobe Desert.

The three astronauts, 56-year-old veteran astronaut Ni Hoisheng, Ni-led crew Lu Booming (54) and Tang Hongpo (45), will stay on the Tianhe spacecraft 380 kilometers from Earth for three months. This is the first time in five years that Chinese astronauts have been in space for a long time.

The main task of Commander Ni Hoisheng and his team was to bring the 22.5-ton Dianhe spacecraft into operation. The Tianhe spacecraft is the first major component of a 70-ton space center to be set up by China. The space center, planned by China, is said to have space for astronauts, science labs and a telescope to view the universe.

close

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.