
சென்னை கிண்டி அருகே ஆதம்பாக்கம் பகுதியில் ரயில் முன் மாணவி சத்யஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலந்தூரில் உள்ள சத்யா வீட்டில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கொலையாளி சதீஷ் திட்டமிட்டு கொலை செய்ததுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாணவி கொல்லப்பட்டபோது ரயில் நிலையங்களில் பணியில் இருந்த ரயில்வே போலீசார் மற்றும் கேன்டீன் ஊழியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
Leave a Reply