Beware of fish.!.sold formalin on fish for sale..700 kg of fish destroyed..!

Food safety officials seized 700 kg of chemically treated fish at the Madurai Karimedu Cattle Fish Market and destroyed it. Food safety officials raided the Madurai Cattle Fish Market at midnight. With the help of laboratory assistants, Food Safety Department District Designated Officer Jayaraman Pandian inspected the fish brought in containers from outside states including Andhra Pradesh and Kerala and confiscated the fish. Jayaraman Pandian said 630 kg of spoiled fish was seized during a search of a fish market in Jayaraman Pandian. The study was also conducted at the Cattle Fish Market. There, 70 kg of chemically coated fish were seized. He further added that the shops would be sealed and fined if they did not make good quality sales in the future. The public can lodge a complaint on WhatsApp at 9444042322 if the fish is spoiled. Formalin, a chemical, is usually applied to fish to keep them from spoiling for long periods of time. Formalin is a chemical that helps keep the human body intact. Applying this on the fish will not cause any odor even on the fish that died several days ago. Having this fish can cause stomach upsets and even kidney problems if eaten regularly. So the fish should be tested to see if the eyes are fine, the sepals are red and the body is firm.

மீன்கள் ஜாக்கிரதை..!.மீன்கள் மீது ஃபார்மலின் தடவி விற்பனை..700 கிலோ மீன்கள் அழிப்பு..!

மதுரை கரிமேடு மாட்டுத்தாவணி மீன்மார்கெட்டில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  அதிரடி சோதனையில் 700 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. மதுரை மாட்டுத்தாவணி மீன்மார்கெட்டில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நள்ளிரவில் திடீரென அதிரடடிசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திரா,கேரளா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கன்டெய்னர்களில்  கொண்டு வரப்பட்ட மீன்களை ஆய்வக  உதவியாளர்கள் உதவியுடன்  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமன் பாண்டியன் தலைமேலாக  அதிகாரிகள்  ஆய்வு  செய்தனர்  அப்போது ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் ஆய்வு  நடத்துவதை  அறிந்த மீன் வியாபாரிகள் பலர் மாட்டுத்தாவணி  மார்க்கெட் வளாகத்திற்குள் வாகனங்களை கொண்டுவராமல் வெளிப்பகுதியில் நிறுத்திவிட்டு தலைமறைவானார்கள் இது குறித்து  ஜெயராமன் பாண்டியன் கூறுகையில் மீன்களில் ரசாயனம் பொருட்டுகள் தடவி  இருப்பதாக வந்த புகாரின் பே ரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது  கரிமேடு மீன்மார்கெட்டில் நடத்தப்பட்ட  சோதனையில் 630 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. மாட்டுத்தாவணி மீன்மார்கெட்டிலும்  ஆய்வு  நடைபெற்றது. அங்கும், 70 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இது குறித்து அவர்கூறுகையில் வருங்காலத்தில் தரமான நல்ல விற்பனை செய்யாவிட்டால் கடைகளுக்கு சீல் வைப்பதுடன் , அபராதமும்  விதிக்கப்படும். பொதுமக்கள்  மீன்கள் கெட்டுப் போய் இருக்கும் பட்சத்தில்  9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். பொதுவாக மீன்களை நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் வைப்பதற்காக ஃபார்மலின் என்ற வேதி பொருளை அதன் மீது தடவுகிறார்கள். மனித உடலை கெட்டுப் போகாமல் வைத்திருக்க உதவும் ஒரு வித வேதி பொருள்தான் இந்த ஃபார்மலின். இதை மீன்கள் மீது தடவி வைத்தால் பல நாள்களுக்கு முன் இறந்து போன மீன் மீது கூட துர்வாசனை அடிக்காது. இந்த மீனை உண்டால் , வயிறு உபாதைகள் ஏற்படலாம், தொடர்ந்து, சாப்பிட்டால் சிறுநீரகக்  கோளாறுகள் கூட  ஏற்படலாம். எனவே மீனின் கண்கள் நன்றாக உள்ளனவா, செவில் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் உள்ளதா என சோதிக்க வேண்டும்.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.