Share

வாழைப்பழம் தாவரவியல் ரீதியாக ஒரு சதைப்பற்றுள்ள பழம் மற்றும் வாழை இனத்தில் உள்ள ஒரு பெரிய புதர் பூக்கும் தாவரத்தால் உற்பத்தி செய்யப்படும் உண்ணக்கூடிய பழமாகும். மா, பலா, வாழைப்பழம் ஆகிய மூன்று பழங்களில் கடைசிப் பழமாக இருந்தாலும், உலக மக்கள் தினமும் உண்ணும் முதல் பழம் வாழைப்பழம்தான். எப்பொழுதும் எங்கும் கிடைக்கும் இனிப்புப் பழம் இது. இந்த பழம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பப்படுகிறது. இந்த பழங்கள் அளவு, நிறம் மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றில் வேறுபடுகின்றன என்றாலும், அவை பொதுவாக நீளமாகவும், வளைந்ததாகவும் இருக்கும். இது மென்மையான சதை மற்றும் மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் ஊதா தோல்களால் மூடப்பட்டிருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில், பல வகையான வாழைப்பழங்கள் காணப்படுகின்றன. அவற்றில் கடுக்கரை நேந்திரம் பழம் (எத்தன் பழம்) குமரி மாவட்டத்தில் மட்டுமே விளையும் உலகத் தரம் வாய்ந்த, சத்துள்ள பழமாகும்.

வாழைப்பழத்தின் வரலாறு

வாழைப்பழம் முதலில் ஆசியாவில் தோன்றி பின்னர் . மத்திய அமெரிக்கா, வட அமெரிக்கா சென்றது. கிமு 327 இல் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்தபோது, ​​அவர் வாழைப்பழங்களை விரும்பி உண்டார்.  திரும்பி வரும் வழியில் கிரீஸ் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அரேபியர்கள் அடிமை வியாபாரத்துடன் சேர்த்து இந்த வாழைப்பழத்தை விற்றனர். முந்தைய காலங்களில், வாழைப்பழம் விரல் நீளம் தான் இருக்கும். பனானா என்றால் அரேபிய மொழியில் விரல் என்று பொருள். எனவே இந்தப் பழத்திற்கு இந்தப் பெயர் வந்தது.

வாழைப்பழத்தின் வகைகள்

1. பேயன் வாழைப்பழம்

2. ரஸ்தாளி வாழைப்பழம்

3. பச்சை வாழைப்பழம்

4. நாட்டு வாழைப்பழம்

5.  மலை வாழைப்பழம்

6. நவரை வாழைப்பழம்

7. சர்க்கரை வாழைப்பழம்

8. செவ்வாழைப்பழம்

9. பூவன் வாழைப்பழம்

10. கற்பூர வாழைப்பழம்

11. மொந்தன் வாழைப்பழம்

12. நேந்திர வாழைப்பழம்

13. கரு வாழைப்பழம்

14. அடுக்கு வாழைப்பழம் 

15. வெள்ளை வாழைப்பழம்

16. ஏலரிசி வாழைப்பழம்

17. மோரீஸ் வாழைப்பழம்

18. மட்டி வாழைப்பழம் 

பேயன் வாழைப்பழம்

1. தடித்த தோல், இனிப்பு சுவை கொண்ட பழம்

2. அதிக வெப்பம் கொண்ட உடலை பேயன் பழத்தால் சமன் செய்யலாம். அதாவது, பேயன்  பழம் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

3. குழந்தைகளுக்கு ஏற்படும் கண சூட்டை குறைக்கும் தன்மை கொண்டது

4. உடல் நலத்திற்கு நல்லது

5. மலச்சிக்கலை நீக்குகிறது

6. உடலில் அதிக குளிர்ச்சி உள்ளவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் அது நுரையீரலை சேதப்படுத்துகிறது.  வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று சாப்பிடுங்கள்.

ரஸ்தாளி பழம்

1. சாப்பிட சுவையாக இருக்கும். இந்த பழம் வாத நோயாளிகளுக்கு ஏற்றதல்ல என்று சொல்லப்படுகிறது.

2. பசியை அடக்கும் இப்பழத்தை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

3. பலர் உணவுக்குப் பிறகு ரஸ்தாலிபழம் சாப்பிடுகிறார்கள். இது தவறு. ஏனென்றால் உடனே சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும்.

4. இந்த பழத்தில் அதிக மாவுச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும்.

5. நன்கு பழுத்த ரஸ்தாளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து குடித்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

6. வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மோரிஸ்

1. மோரிஸ் பழத்தில் பச்சை மற்றும் மஞ்சள் என இரண்டு வகைகள் உள்ளன. எனவே அதன் நிறத்தின் அடிப்படையில் பொதுவாக பச்சை அல்லது மஞ்சள் வாழைப்பழம் என்று அழைக்கப்படுகிறது.

2. பச்சை மொரிஸ் பழத்தை பச்சை நாடன் என்று தவறாக நினைக்கும் வாய்ப்பு உண்டு. 

3. இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது

4. இந்த பழத்தை சிறிய அளவில் சாப்பிடுவது நல்லது.

5. சிரங்கு, ஆஸ்துமா, வாத நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.

6. மேற்கண்ட நோயாளிகள் சிறிதளவு சாப்பிட்டாலும் நோய் அதிகரிக்கும்.

7. இந்த பழம் பித்தத்தை அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

பச்சை நாடன்

1. பச்சை வாழைப்பழத்தில் குடல் புண்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. குடலில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரித்து, வயிற்றுப்புண் எனப்படும் “அல்சரை” உண்டாக்குகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

2. பச்சை வாழைப்பழம்,  நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும். ஏனெனில் பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச்  அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

3. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்து. இதில் பொட்டாசியம் அதிகப்படியாக இருப்பதால் சிலருக்கு பயனளிக்காது.

4. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். 

5. இந்த பழம் இரத்த ஓட்டத்தை சீராக்கவும், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

6. பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பற்களுக்கு கால்சியம் சத்து வழங்குவதன் மூலம் பற்களை பலப்படுத்துகிறது.

மலை வாழைப்பழம்

1. சற்று விலை உயர்ந்த பழம்.

2. வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர, மற்ற அனைவரும்  சாப்பிட வேண்டிய பழம்.

3. நல்ல சுவை மற்றும் அற்புதமான வாசனை கொண்ட பழம்.

4. பசியை கொஞ்சம் அடக்குகிறது, ஆனால் ரஸ்தாலி அளவுக்கு இல்லை.

5. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலை அழகாக மாற்றும்.

6. தினமும் மதியம், இரவு உணவுக்கு பிறகு சிறிது நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் விரிவடைந்து, உடல் வலுவடையும்.

7.  செரிமானத்திற்கு நல்லது. மலச்சிக்கலைத் தடுக்கிறது.

8. அஜீரணக் கோளாறுகளுக்கு மலை வாழைப்பழத்தில் சிறிதளவு ஆமணக்கு எடுத்து பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையும்) சாப்பிட்டால் கோளாறுகள் தீரும்.

9. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவது நல்லது. பொதுவாக ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் பெருகும்.

கற்பூரவள்ளி வாழைப்பழம்

1. கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் செரோடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் நிறைந்துள்ளது. இது உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

 2. கற்பூரவல்லி வாழைப்பழம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் இதில் உள்ள மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

3.தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை விரைவில் குணமாக்க இந்தப் பழம் உதவுகிறது.

4.உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும் , மூளை வளர்ச்சிக்கும் ஏற்றது.

5. கற்பூரவல்லி வாழையின் தோலை வீணாக்காமல் சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் மூன்று நாட்கள் ஊறவைத்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். 

6. பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி-6 மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

7. இது கற்பூரவல்லி என்றும் தேன் வாழை என்றும் அழைக்கப்படுகிறது

8. பழத்தின் நடுவில் சற்று அதிக விதைகள் இருக்கும்

மொந்தன் வாழைப்பழம்

1. இந்தப் பழத்தை பொந்தன் வாழை என்றும் அழைப்பர்.

2. பழுத்த பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.

3. இந்த பழத்தை அளவோடு சாப்பிட்டால் நல்லது.

4. ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு சாப்பிட்டால் பசியை மந்தப்படுத்திவிடும்

5. உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டால், வெப்பத்தைத் தணிக்கும்.

6. வாந்தியை நிறுத்துகிறது.

7. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

நேந்திர வாழைப்பழம்

1. நேந்திரம் பழம் தினமும் உட்கொள்வது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

2. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

3.காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு பழமும் ஒரு முட்டையும் சாப்பிட்டு வந்தால் இந்நோய் நீங்கி வலிமை பெறும்.

4. நன்கு பழுத்த நேந்திரம் பழத்தை வேகவைத்து 1 வயது முதல் குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல உடல் வளர்ச்சியும், ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

5. பழுத்த நேந்திரம் பழமும் மிளகு பொடியும் கலந்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

6. நேந்திரம் பழத்தில் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன.

7. ஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

8. நேந்திரம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

9. நேந்திரம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமத்தைப் பாதுகாத்து, சருமம் பொலிவாக இருக்கும்.

10. நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.

நவரை வாழைப்பழம்

1. 1. மிகவும் குளிர்ச்சி

2. யாரும் அதிகம் விரும்பாத பழம் இது. ஆரோக்கியமற்றது.

3. சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது, இது அல்சரை அதிகப்படுத்தும்.

4. முடக்கு வாத நோயாளிகள் சாப்பிட கூடாது.

5. பசியை அடக்குகிறது. மலச்சிக்கலை உண்டாக்கும்.

6. அதிகமாக சாப்பிட்டால் சோம்பேறியாகிவிடும். அதாவது மந்தமாகவே இருக்கும்.

அடுக்கு வாழை

1. நவரை பழத்தின்  அனைத்து குணங்களும் இதில் உள்ளது.

2. எந்த நோயும் இல்லாதவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவது நல்லது. 

கருவாழை

1. அதிகம் விற்பனைக்கு வராத பழம்.

2. மலைப் பகுதிகளில் விளையும் பழம்

3. வாத நோய் நோயாளிகளுக்கு நல்லதல்ல.

4. உடலுக்கு ஊட்டம் தரும் நல்ல பழம்.

5. இது குழந்தைகளின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் தன்மை கொண்டது. இந்தப் பழம் கிடைத்தால் வாரம் மூன்று முறை கொடுக்கலாம்.

செவ்வாழை

1. வாழைப்பழங்களில் இந்த பழத்தில்தான் அதிக சத்துக்கள் உள்ளன

2. சிவப்பு நிறத்தில் தடித்த மற்றும் சற்று நீளமானது

3. குமரி மாவட்டத்தில் விளையும் இப்பழம் சாப்பிட சுவையாக இருக்கும். மற்றும் கொஞ்சம் விலை உயர்ந்தது.

4. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்தான பழமாகும்.

5. செவ்வாழைப்  தொடர்ந்து சாப்பிட்டு வருபவர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொற்றுநோய்கள் அவர்களை விட்டு ஓடிவிடும்.

6. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான நோய்கள் விலகும்.

7. செவ்வாய் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

மட்டி வாழை

1. மட்டி வாழை ரகம் தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பயிரிடப்படுகிறது.

2. மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரும். பழங்கள் தார் மீது நெருக்கமாக இருக்கும்.

3. இனிப்புச் சுவையும் நறுமணமும் கொண்டிருப்பதாலும், விதை இல்லாததாலும் குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது.

4. இதன் வயது 11 முதல் 12 மாதங்கள்.

5. தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன் 120 முதல் 150 பழங்களைக் கொண்டிருக்கும்.

6. ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோ வரை எடை கொண்டது.

7. ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

1. நீர் (ஈரப்பதம்) – 66.4 கிராம்

2. நார் – 0.4 கிராம்

3. கொழுப்பு – 0.3 கிராம்

4. புரதம் – 1.2 கிராம்

5. ஸ்டார்ச் (மாவுப்பொருள்)  – 28.0 கிராம்

6. சக்தி (ஆற்றல்) – 114.0 கலோரி

7. பாஸ்பரஸ் – 36.0 மிலி

8. இரும்பு – 0.8 மி.கி

9. கால்சியம் – 16.0 மி.கி

10. தையாமின் – 0.05  யு.ஜி

11. கரோட்டின் – 0.78 மி.கி

12. ரைபோஃபிளேவின்  – 0.07 மி.கி

13. நியாசின் – 0.5 மி.கி

14. வைட்டமின் ஏ – 12.0 ஐ.கியு

15. வைட்டமின் பி1 – 0.5 மி.கி

16. வைட்டமின் பி2 – 0.08 மி.கி

Banana

Banana is botanically a fleshy fruit and an edible fruit produced by a large shrubby flowering plant in the genus Banana. Although it is the last fruit among the three fruits namely mango, jackfruit and banana, the banana is the first fruit eaten by the people of the world every day. It is a sweet fruit that is always available everywhere. This fruit is loved by children to old people. Although these fruits vary in size, color and firmness, they are generally elongated and curved. It is covered with soft flesh and yellow, green, red, brown and purple skins. In Kanyakumari district, several varieties of bananas are found. Among them Kadukkarai Nendram fruit (Ethan fruit) is a world class, nutritious fruit grown only in Kumari district.

History of the Banana

The banana first appeared in Asia and then . Went to Central America, North America. When Alexander invaded India in 327 BC, he was fond of bananas. On the way back it is said to have been introduced to Greece and the West. The Arabs sold this banana along with the slave trade. In earlier times, bananas were only finger length. Banana means finger in Arabic. Hence the name of this fruit.

Varieties of Banana

1. Bayan Banana

2. Rastali Banana

3. Green banana

4. Country banana

5. Mountain Banana

6. Navara Banana

7. Sugar Banana

8. Red Banana

9. Boovan banana

10. Camphoravalli  banana

11. Mondan banana

12. Nendra banana

13. Karu Banana

14. Layered banana

15. White banana

16. Allerici banana

17. Morris banana

18. Matti Banana

Beyan Banana

1. Thick-skinned, sweet-tasting fruit

2. Overheated body can be balanced with bayan fruit. That is, bayan fruit is antipyretic.

3. Reduces fever in children

4. Good for health

5. Relieves constipation

6. It is not good for people who are very cold in the body to seek this fruit. Because it damages the lungs. Eat two or three a week.

Rastali Banana

1. Delicious to eat. This fruit is said to be unsuitable for rheumatic patients.

2. It is better not to eat too much of this fruit as it suppresses appetite.

3. Many people eat rastali after meals. This is wrong. Because eating right away will cause indigestion.

4. Diabetic patients should avoid this fruit as it is high in starch.

5. Dissolve well-ripened Rasthali in a glass of water and drink it to control diarrhoea.

6. Half Rastali mixed with honey is good for the health of growing children.

Morris Banana

1. There are two types of morris fruit, green and yellow. Hence it is generally called green or yellow banana based on its color.

2. There is a possibility of mistaking green morris fruit for green natan.

3. It is genetically engineered

4. It is better to eat this fruit in small quantities.

5. People suffering from scabies, asthma, rheumatism etc. should avoid this fruit.

6. Even if the above patients eat little, the disease increases.

7. This fruit increases bile. So it is better to eat in moderation.

Green Nadan Banana

1. Green banana has healing properties for intestinal ulcers. Acids secreted in the intestine erode the intestinal wall, causing an “ulcer” called a peptic ulcer. If you eat green bananas regularly, you can get rid of this effect.

2. Green banana is a remedy for diabetic patients. Because green bananas are rich in starch, they control blood sugar levels and keep diabetes under control.

3. Green banana is an excellent medicine for people suffering from heart disease. It is high in potassium and may not benefit some people.

4. People who want to lose weight can regularly consume green banana.

5. This fruit helps regulate blood flow and improves blood flow to the heart.

6. Green banana plays a very important role in removing teeth related problems. Strengthens teeth by providing calcium to the teeth.

Mountain Banana

1. A slightly expensive fruit.

2. A fruit to be eaten by all except those suffering from rheumatism.

3. A fruit with good taste and wonderful smell.

4. Suppresses appetite a bit, but not as much as Rastali.

5. Regular consumption of this fruit will make your body beautiful.

6. If eaten daily in the afternoon and a little later after dinner, the blood expands and the body becomes stronger.

7. Good for digestion. Prevents constipation.

8. For indigestion, if you take a little castor from a mountain banana and mash it and eat it twice (any time), the problems will be solved.

9. It is better to eat once in two days. Generally, people with anemia eat blood that increases.

Karpooravalli banana

1. Kapuravalli banana is rich in serotonin and norepinephrine. It helps in increasing the digestive power in the body.

  2. Camphor banana is good for bones. Because the manganese and magnesium in it help strengthen bones.

3. This fruit helps to heal rash, scabies and sores on the skin quickly.

4. Suitable for physical health, blood development and brain development.

5. Don’t waste the skin of camphoravalli banana and cut it into small pieces and soak it in water for three days and use it as fertilizer for plants.

6. Contains potassium, sodium, vitamin B-6 and fiber. It helps in losing weight.

7. It is also known as Camphorvalli and Honey Banana

8. There are slightly more seeds in the middle of the fruit

Monthan banana

1. This fruit is also known as Pontan banana.

2. Ripe fruit is delicious to eat.

3. It is good to eat this fruit in moderation.

4. Eating three or four at a time suppresses appetite

5. Take one or two a day after meals to relieve heat.

6. Stops vomiting.

7. It has the property of curing jaundice.

Nendra banana

1. Consuming Nendram fruit daily helps to increase blood volume in the body.

2. Increases memory power.

3. If people suffering from tuberculosis eat a fruit and an egg every day, the disease will be cured and they will get stronger.

4. If well ripe Nendram fruit is boiled and given to children from 1 year of age, children will get good physical growth and nutrition.

5. Mix ripe Nendram fruit and pepper powder and eat it two or three times to get rid of cough problem.

6. Nendram fruit contains nutrients that reduce body heat and increase coldness.

7. Thin people will gain weight if they eat Nendram fruit boiled.

8. Regular consumption of Nendram fruit will increase iron content in the body.

9. Eating Nendram fruit daily protects the skin and makes the skin glow.

10. Cures nervousness.

Navara banana

1. Very cold

2. It is a fruit that no one likes much. Unhealthy.

3. People with rash and scabies should not eat this as it will aggravate ulcers.

4. Rheumatoid patients should not eat.

5. Suppresses appetite. Causes constipation.

6. Eating too much makes you lazy. That means it will remain sluggish.

Layered banana

1. It has all the qualities of Navari fruit.

2. People who do not have any disease should eat this fruit.

Karu Banana

1. Fruit that doesn’t sell much.

2. A fruit grown in hilly regions

3. Not good for rheumatic patients.

4. A good fruit that nourishes the body.

5. It accelerates the growth of children. If you get this fruit, you can give it three times a week.

Red Plantain

1. Bananas contain the most nutrients in this fruit

2. Red in color thick and slightly long

3. This fruit grown in Kumari district is delicious to eat. And a little expensive.

4. It is a good nutritious fruit that should be consumed by everyone from children to adults.

5. Regular consumption of marsupials increases immunity. Epidemics will run away from them.

6. Regular consumption of this fruit will cure dental diseases.

7. Mars is resistant to various types of infections.

Matti  banana

1. Maddi banana variety is cultivated in Kumari district and Kerala state in Tamil Nadu.

2. Trees grow 8 to 10 feet tall. Fruits are close on tar.

3. It is suitable for children as it has a sweet taste and aroma and is seedless.

4. Its age is 11 to 12 months.

5. Tars contain 120 to 150 fruits with 10 to 12 combs each.

6. Each tar weighs 12 kg to 15 kg.

7. Each fruit weighs between 40gm and 60gm.

Nutrients in bananas

1. Water (moisture) – 66.4 g

2. Fiber – 0.4 g

3. Fat – 0.3 grams

4. Protein – 1.2 grams

5. Starch – 28.0 g

6. Shakti (energy) – 114.0 cal

7. Phosphorus – 36.0 ml

8. Iron – 0.8 mg

9. Calcium – 16.0 mg

10. Thiamin – 0.05 ug

11. Carotene – 0.78 mg

12. Riboflavin – 0.07 mg

13. Niacin – 0.5 mg

14. Vitamin A – 12.0 I.Q

15. Vitamin B1 – 0.5 mg

16. Vitamin B2 – 0.08 mg

admin

Recent Posts

பூங்கார் கைக்குத்தல் அரிசி

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்ற…

1 month ago

மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில்  அதிக தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததுள்ளது.  பழங்காலத்திலிருந்தே, இந்த வகையான…

1 month ago

கருப்பு கவுனி அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்படும், இந்த வகை அரிசி "அரச உணவு" மற்றும் "சக்கரவர்த்தியின் (பேரரசர்) உணவு"…

1 month ago

Ponniyin Selvan: Part Two (2023)

Ponniyin Selvan: Part Two (2023) Full Cast & Crew Directed by  Mani Ratnam Writing Credits…

2 months ago

அரிசி

அரிசி என்பது ஓர் உணவு தானிய வகையாகும். நெல் என்னும் பயிரின் முற்றிய விதையை உடைத்த பிறகு கிடைப்பது அரிசி.…

2 months ago

Jailer (2023)

Jailer (Theatrical release poster) Cast & Crew Directed by Nelson Dilipkumar Produced by  Ramesh Kuchirayar …

2 months ago