Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar of the Jain religion was “Rishabhdev”. The word “Tirthankara” means “one who was born and dissolved his soul from the ocean”. His birthday is said to be celebrated as Atsya Tritiya. He has two wives, Yasaswati and Sukandai. Yasaswati has a son ‘Bharathan’ and a daughter ‘Brahmi’. Sukanta has a son ‘Bhagupali’ and a daughter ‘Sundari’. Adinathar taught writing letters to Brahmi and numbers to Sundari among his two daughters. This is why we call the writing system ‘Brahmi’. Rishabhdev divided his country between his two sons, left the country and became a “Tirthankara” in deep penance.

Rishabhdev’s second son “Bahubali” was full of beauty and heroism. The word “Bahubali” means “one who has a strong pujam”. All the people liked Thampi Bhagwati more than Annan Bharathan. Angered by this, Bharathan invaded to take his brother’s share as well. The ministers came up with the idea that in order to prevent the death of veterans in war, only brother and sister could hold competitions such as ‘wrestling’, ‘water war’ and ‘war of attrition’, to which both brothers agreed. Matches began for both. ‘Bhagupali’ defeated his brother in all the competitions. At the end of the match the brother must be beaten to death. But Bhagwati Wadiya saw his brother’s face, did not beat his brother, cut his own hair and threw it away and became a Jain monk.

Bhagupali did not attain salvation by penance for many days. Concerned, Bhagupali’s sisters Brahmi and Sundari asked Adinath about this. To which he said that salvation would come only if Bhagupali descended from the top of the elephant. Immediately the two met Bhagupali and asked, ‘Brother, why are you standing on the elephant and doing penance?’ Asked. Only then did Bhagupali realize that his arrogance that he was deeply penitent was an obstacle to salvation. Then Bhagupali stood still for more than a year and attained salvation by penance without moving.

They have set up a temple to worship Bhagavad Gita at Saravana Pelkola on the Indragiri Hills in Hassan District, Karnataka. Its height is 57-feet (17 m). This place is said to be the place where the Jains entered Tamil Nadu. It was in 981 AD (10th century) that the statue of Bhagwati was erected by Talakadu Kangar. The Bhagavad Gita is a single stone statue. The statue was erected by a ghoul named Saundarayar. Bhagwati is also known as Eeswaran Gomatiswarar of Gondar.

The Mahamastakabhisheka festival is held here once in 12 years for 20 days. During this ceremony Gomatiswara is anointed with 1008 bowls of water, milk, coconut, butter, banana, saffron, jaggery and sandalwood.

The main purpose of Jainism is to suppress the senses and attain salvation. Although Bhagupali was a master of heroism in that respect, he also proved that he was “a hero” only after attaining salvation.

பாகுபலி கோவில் வரலாறு

இந்தியா முழுமைக்கும் ஒரு காலத்தில் பரவி இருந்த மதம் சமணம் ஆகும் . சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் “ரிஷபதேவர் “ஆவார். “தீர்த்தங்கரர்” என்ற வார்த்தைக்கு “தம் ஆன்மாவைப் பிறவிப் பெருங்கடலில் இருந்து கரையேற்றிக்கொண்டவர் ” என்று பொருள். இவர் பிறந்த தினத்தையே அட்சய திரிதி நாளாகக் கொண்டாடப்படுவதாகச் கூறப்படுகிறது. இவருக்கு யசஸ்வதி, சுகந்தை என்ற இரு மனைவியர்கள். யசஸ்வதிக்கு ‘பரதன்’ என்ற மகனும், ‘பிராமி’ என்ற மகளும் உள்ளன. சுகந்தைக்கு ‘பாகுபலி’ என்ற மகனும், ‘சுந்தரி’ என்ற மகளும் உள்ளன. ஆதிநாதர் தன் இருமகள்களில் பிராமிக்கு எழுத்தையும், சுந்தரிக்கு எண்களையும் கற்றுத் கொடுத்தார். இதனாலே எழுத்து முறையை நாம் ‘பிராமி’ என்று அழைக்கின்றோம். ரிஷபதேவர் தன் நாட்டை தன் இரு மகன்களுக்கும் பிரித்து தந்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி கடும் தவம்புரிந்து “தீர்த்தங்கரர்” ஆனார்.

ரிஷபதேவரின் இரண்டாவது மகனான ‘பாகுபலி’ அழகிலும், வீரத்திலும் நிறைந்தவனாக விளங்கினான் . “பாகுபலி” என்ற வார்த்தைக்கு “வலிமையான புஜம் கொண்டவன்” என்று பொருள் . மக்கள் எல்லாரும் அண்ணன் பரதனை விட தம்பி பாகுபலியையே பெரிதும் விரும்பினர். இதனால் கோபம் கொண்ட பரதன் தன் தம்பியின் பங்கையும் அபகரிக்க வேண்டும் என்று  படையெடுத்தான். போரில் படைவீரர்கள் இறப்பதை தடுக்கும் விதமாக, அண்ணன், தம்பி இருவருக்கு மட்டும் ‘மல்யுத்தம்’, ‘ஜலயுத்தம்’ மற்றும் ‘திருஷ்டியுத்தம்’ போன்ற போட்டிகள் நடத்தலாம் என்று அமைச்சர்கள்  யோசனை சொன்னார்கள், அதற்கு சகோதரர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவருக்கும் போட்டிகள் துவங்கின. அனைத்துப் போட்டிகளிலும் அண்ணனை வென்று வெற்றி பெற்றான்  ‘பாகுபலி’. போட்டியின் முடிவில் அண்ணனை அடித்துக் கொல்ல வேண்டும். ஆனால் பாகுபலி  வாடிய தன் அண்ணனின் முகத்தைக் கண்டு, அண்ணணை அடித்துக் கொல்லாமல், தன் தலைமுடியைத் தானே கொய்து வீசி எறிந்துவிட்டு சமணத் துறவியாக மாறினார்.

பாகுபலி  பலநாட்கள் கடும் தவம் புரிந்தும் முக்தி அடையவில்லை. இதனால் கவலையுற்ற பாகுபலியின் தங்கைகளான பிராமியும்,  சுந்தரியும் இதுபற்றி ஆதிநாதரிடம்  கேட்டனர். அதற்கு அவர் பாகுபலி யானையின் மேலிருந்து இறங்கினால் தான் முக்தி கிடைக்கும் என்று கூறினார். உடனே இருவரும் பாகுபலியைச் சந்தித்து , ‘அண்ணா யானை மீது நின்று ஏன்  தவம் செய்கிறாய் ?’ என்று கேட்டனர். அப்போது தான் பாகுபலிக்கு புரிந்தது, தான் கடும் தவம் புரிகிறேன் என்ற தன்னுடைய அகங்காரம் தான் முக்திக்குத் தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொணடான். பின்பு பாகுபலி ஒரு வருடத்துக்கும் மேலாக நின்றவாறு ஆடாமல் அசையாமல் தவம் புரிந்து முக்தி அடைந்தார்.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் இந்திரகிரி மலையில் உள்ள சரவணபெலகோலாவில் பாகுபலிக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இதன் உயரம் 57-அடி (17 மீ) . இந்த இடம் தான் சமணர்கள் தமிழ்நாட்டில் நுழைய வழிவகுத்த இடமாக கூறப்படுகிறது. இது கிபி 981 இல் (10-ம் நூற்றாண்டில்) தலைக்காடு கங்கர் என்பவர் பாகுபலி சிலையை நிறுவியவர். பாகுபலி சிலை ஒரே பாறையால் செதுக்கப்பட்ட சிலையாகும். இச்சிலையை அமைத்தவர் சாவுண்டராயர் என்னும் கொம்மதர். கொம்மதரின் ஈஸ்வரன் கோமதீஸ்வரர் என்று பாகுபலி அழைக்கப்படுகிறார்.

இங்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமஸ்டாபிஷேகத் திருவிழா 20 நாள்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவில் கோமதீஸ்வரருக்கு 1008 கலசங்களில் தண்ணீர், பால், தேங்காய், வெண்ணெய், வாழைப்பழம், குங்குமம், வெல்லம், சந்தனம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சமண சமயத்தின் முக்கிய நோக்கம் ஐம்புலன்களை அடக்கி முக்தி அடைதலே ஆகும். அந்த வகையில் பாகுபலி வீரத்தில் தலைசிறந்தவனாக இருந்தாலும் துறவறம் பூண்டு முக்தி அடைந்து தான் “ஒரு மாவீரன்” என்பதையும் நிரூபித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published.