AIADMK will no longer participate in media debates: OBS, EPS joint statement.

AIADMK co-ordinator O. Panneerselvam and co-coordinator Edappadi Palanisamy have issued a joint statement saying that the AIADMK will no longer participate in coordination television and social media discussions.

AIADMK Coordinator O. Panneer Selvam and Co-Coordinator Edappadi K. Palanisamy said in a joint statement: –

While the basic needs and daily problems of the people are numerous, the media companies, which are the fourth pillar of democracy, are the AIADMK. It is disrespectful to the media and tarnishes the media. Gives.

For these reasons, we kindly request AIADMK executives, spokespersons and AIADMK members not to participate in media discussions anymore and to stop talking to anyone who claims to represent us.

We urge you not to call or allow anyone through their media to reflect the name of the association in any other way and not to call anyone else and identify them as AIADMK.

Thus said the joint statement.

      அதிமுக இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை.

தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிடுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கையில்  தெரிவித்துள்ளதாவது:-

மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கின்றபோது, அதைப்பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல், ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக் கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுக-வின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம்போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும் கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

இக்காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களை பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிகொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழி யாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கூட்டறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.