தமிழகம்

After 5 days in Coimbatore, a leopard was trapped in a cage

Share

Residents of Kuniyamuthur, Sukunapuram, Kovaiputhur and Madukkarai have been relieved by the capture of a leopard that has been terrorizing the public for the past few months.

Kuniamuthur:

The leopard roamed around Kuniyamuthur, Sugunapuram, Kovaipudur, and Madukkarai areas in Coimbatore district and entered a private godown in the BK Pudur area on the 17th.

Foresters rushed in and spread cages and nets to catch the leopard. But the leopard remained intact.

They fitted 6 cameras inside the godown and monitored the leopard. The leopard inside the godown was just moving around every room from where it was, coming near the cages and back.

They were actively engaged in the task of catching the leopard for the 5th day yesterday. In this situation, the forest department monitored the movement of the leopard at midnight yesterday. They were patiently waiting for the leopard to come into the cage today anyway.

Just as the foresters were expecting, at midnight the leopard came in to eat the caged meat inside the godown, just as the foresters had pulled the cage door shut with a rope. Thus the leopard was trapped.

The trapped leopard was loaded onto a truck by foresters and taken to a wooded area in Mettupalayam. There the leopard was given meat and water and the leopard ate it. A medical examination was then performed.

Forest Ranger Ramasubramaniam said:

We have been fishing for 5 days. The leopard was trapped in the cage at around midnight yesterday. The leopard was immediately taken to the Mettupalayam area.

A veterinary team was called there and the leopard’s health was examined. Doctors said the leopard had not eaten for 5 days but was in good health.

Accordingly, when we thought of which forest we could leave the leopard in, we decided to go to the Pollachi Topslip forest and work on it.

 This morning, the forest department caged the leopard, loaded it on a truck, and drove it to the Pollachi Topslip forest, where it was released.

Residents of Kuniyamuthur, Sugunapuram, Kovaiputhur, and Madukkarai have been overjoyed to catch a leopard that has been threatening the public for the past few months. 

கோவையில் 5 நாட்களுக்கு பிறகு குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

கடந்த சில மாதங்களாக குனியமுத்தூர், சுகுணாபுரம், கோவைப்புதூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை பயமுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் நிம்மதி அடைந்தனர்.

குனியமுத்தூர்:

கோவை மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர், சுகுணாபுரம், கோவைப்புதூர், மதுக்கரை பகுதிகளில் சுற்றி வந்த சிறுத்தை கடந்த 17-ந் தேதி பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் புகுந்தது.

வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டுகள் மற்றும் வலையை விரித்து வைத்து காத்திருந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் குடோனிலேயே இருந்தது.

குடோனுக்குள் 6 கேமராக்களை பொருத்தி சிறுத்தையை கண்காணித்து வந்தனர். குடோனுக்குள் இருக்கும் சிறுத்தை தான் இருந்த இடத்தை விட்டு ஒவ்வொரு அறையாக சுற்றி கொண்டும், கூண்டுகளின் அருகே வந்து விட்டு, திரும்பி செல்வதுமாகவே இருந்தது. 

நேற்று 5-வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். எப்படியும் இன்று கூண்டுக்குள் சிறுத்தை வரும் என பொறுமையுடன் காத்து கொண்டிருந்தனர்.

வனத்துறையினர் எதிர்பார்த்தது போலவே நள்ளிரவில் சிறுத்தை குடோனுக்குள் கூண்டில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை தின்பதற்காக உள்ளே வந்தது, அப்படியே  வனத்துறையினர் கயிற்றால் கூண்டு கதவை இழுத்து மூடினர.  இதனால் சிறுத்தை சிக்கி கொண்டது.

கூண்டில் சிக்கிய சிறுத்தையை, வனத்துறையினர் லாரியில் ஏற்றி  மேட்டுப்பாளையத்தில் உள்ள மரக்கிடங்கு பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தைக்கு இறைச்சி மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டு, சிறுத்தை சாப்பிட்டது. அதன்பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறியது:

5 நாட்களாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தோம். நேற்று நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. உடனடியாக சிறுத்தை மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது. அதில் சிறுத்தை  5 நாட்கள் சாப்பிடவில்லை என்றாலும் ஆரோக்கியத்துடனே இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

அதன்படி நாங்கள் சிறுத்தையை எந்த வனப்பகுதியில் விடலாம் என  யோசித்தபோது,  பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விட முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.

 இன்று காலை வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் வைத்து அடைத்து லாரியில் ஏற்றி கொண்டு பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதிக்கு சென்று, சிறுத்தையை விட்டனர்.

கடந்த சில மாதங்களாக குனியமுத்தூர், சுகுணாபுரம், கோவைப்புதூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

admin

Recent Posts

The plus-2 general election starts today

8 lakh 37 thousand 317 students in Tamil Nadu are scheduled to write the Plus-2…

2 weeks ago

Bahubali Temple History

Jainism was a religion that spread all over India at one time. The first Tirthankar…

2 weeks ago

A transformed corona wave may come in summer .. !! – Research information

Researchers say a delta or another mutated corona wave could come in the summer. The…

2 weeks ago

“World War III begins” when Russian ship sinks – Russian television

The bomber struck shortly after noon in front of a Russian warship on the Black…

1 month ago

Comedian Vivek’s First Anniversary Commemoration !!

Today is the day that comedian Vivek passed away on the same day last year…

1 month ago

Economic collapse in Ukraine due to war !!.

The Russian military has been waging war on Ukraine for the 47th day. The Ukrainian…

1 month ago