Share
Facebook
ஆதி விநாயகர் கோயில்

திருவாரூ மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலையம். இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனிதம் உகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவை.

திலதைப்பதி ஆலயத்தின் முன் பிள்ளையாரப்பர் மனிதமுகத்துடன், நரமுக விநாயகராக, ஆதிவிநாயகராக மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் அருள்கின்றார். வேறெங்கும் இத்தகைய திவ்ய ஸ்ரூபத்தைக் காண இயலாது. ஸ்ரீ அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூக்கும வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்லையார் மூர்த்தி இவர்.

குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், புதல்விகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாடக மூர்த்தி. குழந்தைகளுக்கு , பள்ளி பருவத்தினருக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல மூர்த்தி.

ஸ்தல வரலாறு

ஒரு சமயம், இறைவன் சிவலோகத்தில் இருந்து தனியே புறப்பட்டு உயிர்களின் நலம் கண்டுணர தேசங்கள் தோறும் சஞ்சாரம் செய்யலானார். அந்த சமயத்தில் ஒருநாள், அம்பாளோ நித்திய கடன் முடிக்க நீராடி வரச் சென்றாள்.

அன்று ஏனோ தனித்திருக்கும் தனக்கு காவலாக ஒருவர் இருந்தால் நல்லது என்று தோன்றியது. குளிக்கச் செல்லும் முன், காவலுக்கு பலம் பொருந்திய ஒருவரை நிறுத்தி விட்டுச் செல்ல எண்ணினாள். நீராடுவதற்காக எடுத்துச் சென்ற மஞ்சள் பொடியால், மங்களம் பொருந்திய சிறுவன் உருவமொன்று சமைத்து காவல் இருக்கச் செய்தாள். செல்லும் முன் சின்ன உத்தரவிட்டாள். “மங்கள மகனே, எவர்வரினும் உள்ளே அனுமதிக்காதே!’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அன்னை பார்வதியை வணங்கி “அவ்வாறே ஆகட்டும்’ என்றான், பாலகன்.

வலக்கால் தொங்க விட்டு, இடக்கால் மடித்து இடக்கையை இடக்காலின் மீது வைத்து, வலக்கையைச் சற்றுச் சாய்த்து அபயமுத்திரையினைக் காட்டியவாறு அமர்ந்து காவல் காக்கத் தொடங்கினான் அதேசமயம் உலா முடிந்து அந்த உமாபதி, அவசரமாக உள்ளே செல்ல முற்பட்டார். தடுத்தான், உமைபடைத்த பாலன். விக்னம் செய்த சிறுவன் மேல் சிவபிரானுக்கு சினம் ஏற்பட்டது. வாதம் செய்த அவனை வதம் செய்ய முடிவு செய்தார். கோபம் மேலோங்க, அவனது சிரம் அறுத்து எறிந்தார்.

போரோலி போன்ற பேரொலி கேட்டு ஓடி வந்தாள், சிவகாமி. நடந்தது அறிந்து சினந்தாள். யார் அந்தப் பிள்ளை என்றார் மகேசன். “நான் படைத்த நம் மகன் என்றாள். அவனை உயிர்ப்பிக்க வேண்டுவது உம் கடன்!’ என்று ஈசனிடம் உரைத்தாள். சிறுவன் மேல் கொண்ட சினத்தை உணர்ந்த சிவபெருமான், தவறை நினைத்து வருந்தினார். பின்னர் கனங்களை அழைத்து, வடபுறம் தலைவைத்து இருக்கும் ஜீவனின் தலையைக் கொண்டுவந்து பொருத்துக என உத்தரவிட்டார். கிடைத்த யானையின் தலையைக் கொண்டுவந்து பொருந்தினர் கணங்கள். அதற்கு உயிர் அளித்தார் உலகேசன்.

அதுமுதல் யானை தலையும் மனித உடலுமாக உயிர்த்து எழுந்த கணேசன், பெற்றோரைப் பணிந்தான். சிவாலயங்களில் தனக்கெனத் தனியிடமும், அந்தஸ்தும் வேண்டுமெனக் கேட்டான். அதோடு, நான் உருவான இடத்தில் தன் பழைய உருவுடன் காட்சி தர வேண்டும் எனவும் வேண்டினான்.

சிவனார் தனது கணங்களுக்கு எல்லாம் அவனைத் தலைவனாக்கி கணபதி என அழைத்தார். அதோடு கணங்களுக்குத் தலைவன், கணேசன் எனவும் தெய்வ நிலையுடன் விளங்கச் செய்தார். அனைத்து சிவாலயங்களிலும் மூலக் கருவறையின் பின்புறம் தனிச் சன்னதி தந்ததோடு, திருவீதி உலாவில் பஞ்ச மூர்த்திகளுள் ஒருவராக எழுந்து அருளும் வாய்ப்பையும் நல்கினார்.

மற்றொரு வரத்தின்படி, மனிதர்கள் தொல்லைகளாகிய விக்னங்களில் இருந்து விடுபட்டு சுகமாக வாழவும், முன்வினைப் பயன்கள் தீரவும் அருள்பவராக அரிசிலாற்றங்கரையில் அமைந்த திலதர்ப்பணபுரியில் ஆதிவிநாயகராக பழைய திருமுகத்துடன் கணநாதனை அருள்புரியச் செய்தார். திலதைப்பதி என்றழைக்கப்பட்ட அத்தலம் முன்னோர்க்கு உரிய கடமைகளைச் செய்யும் தலைமாதலால் திலதர்ப்பணபுரி என்றாகியிருக்கிறது இன்று.

திலதர்ப்பணபுரியில் சிவனை நோக்கி அமர்ந்து மனித முகத்தோடு அருள் வழங்கி சிறப்பிக்கும் நரமுக கணபதியை என்று வழிபட்டாலும் பலப்பல நன்மைகள் கிட்டும். குறிப்பாக சதுர்த்தி தினங்களில் வழிபட ஏராளமானோர் குவிகின்றனர். விநாயகர் சதுர்த்தி பூஜை தனிச் சிறப்புடன் நடக்கிறது. என்றும் வழிபட்டு பேறு பெறலாம். திலதர்ப்பணபுரி இன்று மேலும் திரிந்து செதலப்பதி என திரிந்து வழங்குகிறது.

admin

Recent Posts

“போல்ட் நட்” விழுங்கிய ஒருவரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!…

Doctors save the life of a man who swallowed a "bold nut" கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள…

1 month ago

சத்யஸ்ரீ கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்டும் சிபிசிஐடி போலீசார்…

CBCID police collecting evidence in Satyasree murder case… சென்னை கிண்டி அருகே ஆதம்பாக்கம் பகுதியில் ரயில் முன்…

1 month ago

மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு பாரிஸில் ஏலம் !!

Million-year-old dinosaur skeleton up for auction in Paris பல மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு ஒன்று…

1 month ago

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு புக்கர் பரிசு!

Booker prize for the novel written by Sri Lankan writer Shehan Karunathilaka! இலங்கை எழுத்தாளர் ஷெஹான்…

1 month ago

உலகில் அதிக விலை மதிப்புள்ள மிகப்பெரிய வைரம் துபாயில் அறிமுகம் !..

The world's most expensive diamond was introduced in Dubai! உலகில் அதிக விலையுள்ள மிகப்பெரிய வைரம் துபாயில்…

1 month ago

ஒருதலைக் காதல்…! ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை !!….

https://youtu.be/JEg-2uxrrn4 A college student was killed after being pushed by a moving train சென்னை கிண்டியை…

2 months ago