மருத்துவ செய்திகள்

A transformed corona wave may come in summer .. !! – Research information

Share

Researchers say a delta or another mutated corona wave could come in the summer.

The coronavirus, which first erupted in China in 2019, is still testing humanity without leaving the planet.

The coronavirus mutates and spreads like a new virus and infects humans. Research on this is ongoing worldwide. Researchers at the University of Ben-Gurion in Israel have conducted a study and published it in the journal Science of the Total Environment. The result is that a wave of delta virus or another mutated coronavirus could come this summer.

Researchers, including Professor Ariel Kushmaro, said: –

There are a lot of factors regarding corona. Our model shows that another delta wave may form or another deformed corona wave may come, he said.

So far, researchers have been claiming that when a new mutant virus arrives, it will destroy its predecessor virus. But Israeli researchers say otherwise. Contrary to the dynamics expected to decrease the delta variability as the omega-1 virus increases, the results of research conducted with sewage show that there may be a secret cycle of the delta virus, even if the omega size increases, Israeli researchers say.

They added, “According to our model, we expect the omega size to decrease until it is removed. But the delta virus will maintain its secret cycle. ”

The delta virus is a virus of concern in many countries around the world. But the researchers say that the kinetics of the omega is different.

கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்..!! – ஆராய்ச்சி தகவல்

கோடைக்காலத்தில் டெல்டா அல்லது மற்றொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சீனாவில் 2019-ம் ஆண்டு முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் இன்னும் இந்த  பூமியை  விட்டு அழியாமல்  மனித குலத்தை சோதனைக்கு ஆளாக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் உருமாறி உருமாறி புதிய வைரஸாக பரவி மனிதர்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது. இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே வருகின்றன. இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதனைப்பற்றி “சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்” பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதன் முடிவு, இந்த கோடை காலத்தில் டெல்டா வைரஸ் அல்லது மற்றொரு  உருமாறிய கொரோனா வைரஸ்  அலை வரலாம் என்பதாகும்.

இதுபற்றி பேராசிரியர் ஏரியல் குஷ்மாரோ உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

கொரோனாவை பொறுத்தவரை நிறைய காரணிகள் உள்ளன. எங்கள் மாதிரி, இன்னொரு டெல்டா அலை உருவாகலாம் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்று காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இதுவரையில் ஆராய்ச்சியாளர்கள், புதிதாக ஒரு உருமாறிய வைரஸ் வருகிறபோது அது தனக்கு முந்தைய முன்னோடி வைரசை அழிக்கும் என்று கூறி வந்தனர். ஆனால், இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மாறாக கூறி உள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் அதிகரிக்கும்போது, டெல்டா மாறுபாடு குறைந்து வரும்  என்று எதிர்பார்க்கப்படுகிற இயக்கவியலுக்கு மாறாக, கழிவுநீர் கொண்டு நடத்திய ஆராய்ச்சியில் பெறப்பட்ட முடிவுகள், ஒமைக்ரான் அளவு அதிகரித்தாலும் கூட, டெல்டா வைரசின் ரகசிய சுழற்சி இருக்கும் என இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், “எங்கள் மாதிரியின்படி, அகற்றப்படுகிற வரையில் ஒமைக்ரான் அளவு குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் டெல்டா வைரஸ் தன் ரகசிய சுழற்சியை பராமரிக்கும்” என்றனர்.

டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய வைரசாக உள்ளது. ஆனால் ஒமைக்ரான் இயக்கவியல் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டி உள்ளது என இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

3 weeks ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

3 weeks ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

3 weeks ago

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்… விசித்திர சம்பவம்!!

தாய்லாந்தில் உள்ள பாட்தலங் மாகாணத்திற்கு தூண்டில் மூலம் மீன் பிடிக்கும் நோக்கில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக தூண்டிலை தண்ணீரில்…

3 weeks ago

கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு சிறுமி பலி  !!

கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த மாதிரியை…

3 weeks ago

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர்…

3 weeks ago