உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட நவீன கட்டிடக்கலை நுட்பங்களுடன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறது துபாய். வியக்க வைக்கும் கலைப்படைப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் அம்சங்களுடன் கூடிய அற்புதமான கட்டிடங்கள் அங்கு உயர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் ‘மூன் ரிசார்ட்’ துபாய்க்கு புதிய அடையாளத்தை சேர்க்கிறது. இது நிலவு போன்ற வடிவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. நிலவின் வடிவிலான இந்த சொகுசு விடுதிக்கு 5 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுமார் 40 ஆயிரம் கோடி. 735 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் நிலவு போல் காட்சியளிக்கிறது. இதன் கட்டுமானப் பணிகள் 48 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் வடிவிலான இந்த மெகா ரிசார்ட்டில் பல நவீன வசதிகள் உள்ளன. இதில் ஸ்பா மையம் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும்.

கட்டிடத்தின் மேல் தளத்தில் கேசினோக்கள் 23 சதவீதமும், இரவு விடுதிகள் 9 சதவீதமும், உணவகங்கள் 4 சதவீதமும் ஆக்கிரமிக்கப்படும். ஆடம்பரமான பொழுதுபோக்கு அம்சங்கள் மொட்டை மாடியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இந்த சந்திர ரிசார்ட் அமீரகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய்க்கு அருகில் உள்ள கத்தாரில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தவுள்ளது. இருப்பினும், கத்தாரில் இடம் இல்லாததால், பெரும்பாலான கால்பந்து ரசிகர்கள் துபாய்க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, துபாயில் இருந்து கத்தாருக்கு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. துபாயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பல இடங்கள் இருப்பதால் கால்பந்து போட்டி துபாயின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மூன் ரிசார்ட்டின் வருகையும் எதிர்பார்ப்பும் துபாயின் கட்டிடக்கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

A moon-shaped luxury hotel that will be the new symbol of Dubai !!

Dubai makes the world look back with modern architectural techniques including the world’s tallest building, the Burj Khalifa. Magnificent buildings with astonishing artworks and eye-catching features keep rising there. Along those lines ‘Moon Resort’ adds a new identity to Dubai. It is massively built in the shape of the moon. The moon-shaped luxury hotel is estimated to cost 5 billion. That is about 40 thousand crores. The 735 feet tall building looks like the moon. Its construction is expected to be completed in 48 months. This moon-shaped mega-resort has many modern amenities. It will have various entertainment features including a spa center and nightly entertainment celebrations.

Casinos will occupy 23 percent of the building’s top floor, nightclubs 9 percent, and restaurants 4 percent. Luxurious entertainment features occupy most of the terrace. It is estimated that this lunar resort will play an essential role in the emirate’s economy. It is expected to take sectors such as hospitality, entertainment, education, technology, environment, and space tourism to the next level. Qatar, near Dubai, will host the World Cup soccer tournament in November and December. However, most football fans are expected to flock to Dubai due to the lack of space in Qatar. Accordingly, it is also planned to operate flights from Dubai to Qatar. The football tournament is expected to play an essential role in Dubai’s economy as Dubai has many attractions for foreign tourists. Also, the arrival and anticipation of Moon Resort will undoubtedly add more pride to Dubai’s architecture.

Leave a Reply

Your email address will not be published.